காதலனோடு சென்று சூப்பர்ஸ்டாருக்கு கல்யாண அழைப்பிதழ் கொடுத்த மேகா ஆகாஷ் - போட்டோஸ் இதோ

Published : Aug 25, 2024, 02:36 PM IST

நடிகை மேகா ஆகாஷுக்கு வருகிற செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அழைப்பிதழை ரஜினிக்கு வழங்கி உள்ளார்.

PREV
14
காதலனோடு சென்று சூப்பர்ஸ்டாருக்கு கல்யாண அழைப்பிதழ் கொடுத்த மேகா ஆகாஷ் - போட்டோஸ் இதோ
Megha akash, Saai VIshnu

கோலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வருபவர் மேகா ஆகாஷ். இவர் தமிழில் எனை நோக்கி பாயும் தோட்டா, பேட்ட, யாதும் ஊரே யாவரும் கேளிர், வந்தா ராஜாவா தான் வருவேன், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் மேகா ஆகாஷ். இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக சாய் விஷ்ணு என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரின் சீக்ரெட் காதல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

24
Megha Akash Meet Rajinikanth

மேகா ஆகாஷின் காதலன் வேறுயாருமில்லை, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த திருநாவுக்கரசரின் மகன் தான் இந்த சாய் விஷ்ணு. இவருக்கும் மேகா ஆகாஷுக்கு 9 ஆண்டுகள் பழக்கமாம். ஆரம்பத்தில் நட்புடன் பழகி வந்த இவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு குடும்பத்தினர் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து, இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டு அரசியல்வாதி மகனுடன் காதல் மலர்ந்தது எப்படி? மேகா ஆகாஷின் 6 வருட லவ் ஸ்டோரி

34
Megha Akash Invite Rajinikanth

மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு ஜோடியின் திருமணம் வருகிற செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் தற்போது தடபுடலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகை மேகா ஆகாஷ், தனது வருங்கால கணவருடன் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து அவருக்கு திருமண அழைப்பிதழையும் கொடுத்துள்ளார்.

44
Rajinikanth with Megha Akash and Saai VIshnu

சு திருநாவுக்கரசரும் உடன் சென்றிருந்தார். மேகா ஆகாஷ் - சாய் விஷ்ணு ஜோடியை வாழ்த்தியதோடு, அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார் ரஜினிகாந்த். பின்னர் சிறிது நேரம் அவருடன் உரையாடிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்திருந்த மேகா ஆகாஷ், எப்போதும் தான் ரஜினியின் தீவிர ரசிகை என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்... 'ஒரு சமூகத்தின் உயிர்வலி' மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்று வாழ்த்திய எம்.பி திருமாவளவன்

Read more Photos on
click me!

Recommended Stories