"தப்பித்தது தலைவர் படம்" அக்டோபர் ரேஸில் இருந்து பின்வாங்கும் கங்குவா? லேட்டஸ்ட் அப்டேட்!

Ansgar R |  
Published : Aug 25, 2024, 04:52 PM IST

Kanguva : பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம், மாற்று தேதியில் வெளியிட பட குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

PREV
14
"தப்பித்தது தலைவர் படம்" அக்டோபர் ரேஸில் இருந்து பின்வாங்கும் கங்குவா? லேட்டஸ்ட் அப்டேட்!
Suriya Kanguva

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, இதுவரை யாரும் கையாலாத ஒரு புதிய கதைகளத்தை, சிறுத்தை சிவா கையாண்டுள்ள திரைப்படம் தான் கங்குவா. நடிகர் சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட இரு வெவ்வேறு காலங்களை ஒன்றிணைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தளபதியின் GOAT.. ஸ்பெஷல் பாடல் ஒன்றை வெளியிட தயாரான வெங்கட் - ஒரு Surprise இருக்கு!

24
Vettaiyan

இந்நிலையில் அதே அக்டோபர் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "வேட்டையன்" என்கின்ற திரைப்படமும் வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே சூர்யாவை வைத்து "ஜெய் பீம்" என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், முதல் முறையாக சூப்பர் ஸ்டார் நடித்த திரைப்படம் தான் "வேட்டையன்". அந்த திரைப்பட பணிகளை முடித்துவிட்டு தான் சூப்பர் ஸ்டார் இப்பொழுது "கூலி" திரைப்பட பணிகளில் பயணித்து வருகின்றார்.

34
Vettaiyan Vs Kanguva

கடந்த சில நாட்களாகவே இவ்வாண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு முக்கிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக "கங்குவா" திரைப்படம் சுமார் 38 மொழிகளில் உலக அளவில் வெளியாக உள்ளதால் முதல் நாளிலேயே சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கங்குவா படத்தால், சூப்பர் ஸ்டார் படம் டல்லடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

44
Kanguva Release Date

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள சில தகவல்களின்படி, கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகாது என்றும், மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் பட குழுவின் சார்பாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கங்குவா படம் பற்றி மிகவும் உறுதியாக இருந்த தயாரிப்பாளர் ஞானவேல், திடீரென இந்த முடிவு எடுக்க என்ன காரணம் என்பது தெரியவில்லை.

அனந்த் அம்பானி திருமணத்திற்கு ஏன் போகல? - கங்கனா ரனாவத் பளீச் பதில்!

Read more Photos on
click me!

Recommended Stories