தோழிகளோடு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய அனிதா விஜயகுமார் - வைரலாகும் போட்டோஸ்
நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா தன்னுடைய தோழிகளோடு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Anitha Vijayakumar
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பேமஸ் ஆனவர் விஜயகுமார். இவருக்கு மொத்தம் 5 மகள்கள் மற்றும் 1 மகன். இதில் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜயகுமார் மகள்களும் சினிமாவில் நடித்துள்ளனர்.
Anitha Vijayakumar photos
விஜயகுமாரின் கடைசி மூன்று மகள்களான வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் ஹீரோயின்களாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்கள். அதேபோல் விஜயகுமாரின் மூத்த மகள் கவிதாவும் கூலி படத்தில் மட்டும் நடித்திருந்தார். விஜயகுமார் வாரிசுகளில் சினிமா பக்கமே தலைகாட்டாத ஒரே ஒருவர் என்றால் அது அனிதா தான்.
Anitha Vijayakumar krishna jayanthi celebration
விஜயகுமாரின் 2வது மகளான இவருக்கும் பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. ஆனால் அனிதாவுக்கு நடிப்பில் இண்ட்ரஸ்ட் இல்லாததால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார். அதன் பின்னர் எம்பிபிஎஸ் படித்து டாக்டராகிவிட்டார் அனிதா. அவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மாரியின் வேறமாரி சம்பவம்... பாக்ஸ் ஆபிஸில் ரஜினி பட வசூல் சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய வாழை
Arun Vijay sister Anitha Vijayakumar
அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடந்து முடிந்தது. அனிதாவின் பேமிலியில் அவரது கணவர், அவரது மகள், அவரது மகன் மற்றும் அவரது மருமகன் என அனைவருமே மருத்துவர்கள் தான்.
Anitha Vijayakumar celebrate krishna jayanthi
மகளின் திருமணத்துக்கு பின்னர் ஜாலியாக தோழிகளுடன் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த அனிதா விஜயகுமார், தற்போது சென்னையில் தனது தோழிகளுடன் சேர்ந்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Anitha Vijayakumar krishna jayanthi celebration Photos
அனிதா விஜயகுமாரின் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்ட புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் போது நடிகர் விஜயகுமாரின் மனைவியும் உடன் இருந்தார்.
இதையும் படியுங்கள்... சூரிக்கு ஒர்க் அவுட் ஆன பார்முலா.. சதீஷுக்கு கைகொடுக்குமா? இன்னொரு ஆக்ஷன் ஹீரோ பராக்!