
கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு கன்டெக்டராக தன்னுடைய வாழ்க்கையை துவங்கி, பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் நண்பரின் துணையோடும், குடும்பத்தினர் ஆதரவோடும் சென்னைக்கு வந்து... அடையாரில் உள்ள பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்து முன்னணி நடிகராக மாறியவர். இவர் படிக்கும் காலங்களில் பட்ட கஷ்டங்களும், வாய்ப்புக்காக நடத்திய போராட்டமும் தான் ரஜினிகாந்தை திரை உலகின் உச்சத்தில் உயர்த்தி அழகு பார்த்தது.
திரையுலக வாழ்க்கையிலும் சரி, பர்சனல் வாழ்க்கையிலும் சரி, என்றுமே சூப்பர் ஸ்டாருக்கு மிஸ்டர் பர்ஃபெக்ட் என்கிற பெயரே கிடைத்துள்ளது. அதேபோல் சக நடிகர் தன்னைவிட வயது குறைந்தவர் என்றாலும் அவருக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர் ரஜினிகாந்த். இதனை பல நடிகர்கள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சினிமா கேரியரை துவங்கிய ரஜினிகாந்த், இதைத் தொடர்ந்து மூன்று முடிச்சு, அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, பதினாறு வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், காயத்ரி, போன்ற பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரமே கிடைத்தாலும், தன்னுடைய ஸ்டைலால் ரசிகர்கள் மனதை கவர்ந்து ஹீரோவாக மாறினார். தற்போதைய இளம் நடிகர்கள் பலரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு திரைப்படமாவது இயக்க வேண்டும் என ஆசைப்படும் அளவுக்கு ரஜினியின் திரை உலக ஆதிக்கம் உள்ளது.
புஷ்பா 2 திரையிடப்பட்ட தியேட்டரில் மற்றொரு மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும், 'கூலி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. அவ்வப்போது இவர் நடிக்கும் படங்களின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ரஜினிகாந்த நடித்து வசூலில் பட்டையை கிளப்பிய ஐந்து திரைப்படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பேட்ட:
நடிகர் ரஜினிகாந்த் நடித்து 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேட்ட.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக நடிகை திரிஷா முதல் முறையாக ஜோடி சேர்ந்தார். மற்றொரு கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகர் சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ரூ.160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.223 கோடி வசூல் செய்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.
'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
கபாலி:
அட்டகத்தி, மெட்ராஸ், போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முதல் திரைப்படம் கபாலி. கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இவருடைய குரல் இந்த படத்தில் ஒலித்தது. ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க, தன்ஷிகா ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார். ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ஒரு தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும்... மற்றொரு தரப்பினர் இந்த படத்திற்கு கடும் விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். ரூ.100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் ரூ.295 கோடி வசூலை குவித்து, நான்காவது இடத்தில் உள்ளது.
எந்திரன்:
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் திரைப்படம் 'எந்திரன்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையில், இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் தற்போது வரை அதிகப்படியான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் செய்யும் ரோபோ எப்படி அவருக்கு எதிராகவே திரும்புகிறது. அவருடைய காதலியே கடத்தி வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டுகிறது என கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைக்களத்தில் இந்த படத்தை இயக்கி, ஹிட் கொடுத்திருந்தார் ஷங்கர். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் ரூ.290 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
மறைந்த பின்னரும் மனைவிக்கு மரியாதை; கோவில் கட்டி கொண்டாட போகும் மதுரை முத்து!
2.ஓ:
ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் இரண்டாவது பாகமாக வெளியான திரைப்படம் தான் 2.0. ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், ரஜினிகாந்த் ஹீரோவாகவும் - அக்ஷய் குமார் வில்லனாகவும் நடித்திருந்தனர். நவீன யுகத்தில் பயன்படுத்தப்படும் போன்கள், அதன் மூலம் வெளியாகும் ஒளி கதிர்களால் பறவைகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை... இந்த படத்தின் மூலம் தன்னுடைய பிரமாண்ட படைப்பில் எடுத்துக் கூறி இருந்தார் இயக்குனர் சங்கர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், உலக அளவில் ரூ.600 கோடி வரை வசூலித்து சாதனை படைத்து, நான்காவது இடத்தில் உள்ளது.
ஜெயிலர்:
ரஜினிகாந்த் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. ஓய்வு பெற்ற ஜெயிலர் வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்த நிலையில், இந்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், கலாநிதிமாறன் இப்படத்தை தயாரித்திருந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். தமன்னா ஒரே ஒரு பாடலில், ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்தார். மேலும் ரஜினிகாந்த் மகானாக நடிகர் வசந்த் ரவி நடிக்க, மிர்னா மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். யோகி பாபு, சுனில், மோகன்லால், சிவராஜ்குமா,ர் ஜாக்கி ஷெரிப் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் உருவான அதிரடி ஆக்சன் கதைக்களம் கொண்ட இந்த திரைப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.650 கோடி வசூல் சாதனை படைத்தது. அதிகம் வசூல் செய்த ரஜினிகாந்த் படங்களில் முதல் இடத்தை இப்படம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
'சூர்யா 45' படத்தில் ரூ.100 கோடி வசூல் மன்னனை கேமியோ ரோலில் களமிறக்கும் ஆர்.ஜே.பாலாஜி!