பிரேமலு ஸ்டைலில் தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

First Published | Dec 12, 2024, 10:48 AM IST

Nilavuku EnMel Ennadi Kobam Movie : ராயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Dhanush

இயக்குனர் தனுஷ்

தனுஷ் ஒரு தரமான நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் அதைவிட சிறப்பான இயக்குனர் என்பதை அண்மையில் வெளிவந்த ராயன் படம் மூலம் நிரூபித்துவிட்டார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆன பா.பாண்டி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து 7 ஆண்டுகள் எந்த படமும் இவர் இயக்கத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில், தன்னுடைய 50வது படமான ராயன் மூலம் மாஸ் வெற்றியை ருசித்தார் தனுஷ்.

Director Dhanush

இயக்குனராக பிசியான தனுஷ்

ராயன் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது. தனுஷ் நடித்த படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையையும் ராயன் பெற்றுள்ளது. ராயன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கியுள்ளார் தனுஷ். அதில் ஒரு படம் இட்லி கடை. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் தனுஷ். இட்லி கடை திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... மறுபடி ஒரு டைவர்ஸா! தனுஷ், ஜிவி வரிசையில் விவாகரத்தை அறிவித்த பிரபல இயக்குனர்

Tap to resize

NEEK Movie

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

அதேபோல் நடிகர் தனுஷ் கைவசம் உள்ள மற்றொரு படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். பிரேமலு ஸ்டைலில் ஒரு ஃபீல் குட் படமாக இதை இயக்கி இருக்கிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார். மேலும் அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Nilavuku EnMel Ennadi Kobam Release Date

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ரிலீஸ் தேதி

2கே கிட்ஸின் காதலைப் பற்றிய ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி இருப்பதால் இப்படத்தை காதல் தினத்தை ஒட்டி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ள தனுஷ், வருகிற 2025-ம் ஆண்டு பிப்ரவரி 7ந் தேதி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... சோலி முடிஞ்சது; கைவிடப்படும் இளையராஜா பயோபிக்? காரணம் தனுஷா?

Latest Videos

click me!