ராஜ வாழ்க்கை வாழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

First Published | Dec 12, 2024, 8:25 AM IST

Rajinikanth Net Worth : தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

Rajinikanth

சிவாஜி ராவ் ரஜினி ஆனது எப்படி?

பெங்களூருவில் சாதரண பஸ் கண்டெக்டராக பணியாற்றி வந்த சிவாஜி ராவ் கெய்க்வாட் இன்று தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருக்கிறார். முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ரஜினி தான். ரஜினியின் ஸ்டைலால் இம்பிரஸ் ஆன இயக்குனர் பாலச்சந்தர் அவரை தன் அபூர்வ ராகங்கள் படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த ரஜினி முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் பைரவி.

Superstar Rajinikanth

ஸ்டைல் மன்னன் ரஜினி

பைரவி படத்தின் வெற்றிக்கு பின்னர் ரஜினியின் ஸ்டைல் மக்களுக்கு பிடித்துப் போக, அவருக்கான ரசிகர் பட்டாளமும் பெரிதானது. கருப்பாக இருந்தால் சினிமாவில் சாதிக்க முடியாது என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவரும் ரஜினி தான். தன்னுடைய ஸ்டைலாலும், துறு துறு நடிப்பாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ரஜினிகாந்த், தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸிலும் ராஜாவாக திகழ்ந்து வந்தார். இதனால் அவருக்கு தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் செம டிமாண்ட் இருந்தது.

Tap to resize

Rajinikanth Birthday

ரஜினியின் மாஸ்டர் பீஸ் படங்கள்

1990-களுக்கு பின்னர் ரஜினி உச்சத்துக்கு சென்றார். 1990 முதல் 2000 வரை அவர் நடிப்பில் வெளிவந்த தளபதி, முத்து, பாட்ஷா, படையப்பா, அருணாச்சலம், வீரா ஆகிய படங்கள் காலம் கடந்து இன்றளவும் கொண்டாடப்படும் மாஸ்டர் பீஸ் படங்களாக உள்ளன. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அவர் நடித்த முத்து படம் தமிழ்நாடு மட்டுமின்றி ஜப்பானில் வெளியானபோதும் சக்கைப்போடு போட்டதோடு, அங்கு அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனையை 20 ஆண்டுகளுக்கு மேல் தக்க வைத்திருந்தது.

இதையும் படியுங்கள்... சிவாஜி முதல் 2.0 வரை! பாலிவுட்டிலும் பட்டைய கிளப்பிய ரஜினி படங்கள்! மிஸ் பண்ணாம பாருங்க!

Rajinikanth Salary

ரஜினிகாந்த் சம்பளம்

தற்போது நடிகர் ரஜினிகாந்துக்கு 74 வயது ஆனாலும், இன்றளவும் நம்பர் 1 நாயகனாக வலம் வருகிறார். அவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் நடிக்க ரஜினிகாந்துக்கு ரூ.250 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கு அடுத்தபடியாக கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான்.

Rajinikanth Net worth

ரஜினிகாந்த் சொத்து மதிப்பு

ரஜினிக்கு சொந்தமாக சென்னை போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா உள்ளது. இதுதவிர சென்னையில் கல்யாண மண்டபம் ஒன்றை வைத்திருக்கும் ரஜினி, பிஎம்டபிள்யூ, ஆடி போன்ற சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு மட்டும் 430 கோடிக்கு மேல் இருக்குமாம். இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தாலும் எளிமையான வாழ்க்கை வாழ்வதையே விரும்புகிறார் ரஜினி. அதுதான் அவரின் ஸ்பெஷலும் கூட. இந்த மாமனிதனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் சோசியல் மீடியா முழுக்க ரஜினிக்கு வாழ்த்து மழை பொழிந்து பதிவுகள் போடப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்... 'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

Latest Videos

click me!