பொதுவில் கிடைக்கும் தரவுகளின்படி சஞ்சய் தத்தின் நிகர சொத்து மதிப்பு ரூ.295 கோடி. ஒரு படத்திற்கு 8 கோடி முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தமிழ் சினிமாவில் அறிமுகமான லியோ படத்தில் 8 கோடி ரூபாய் வாங்கினார் என்று கூறப்படுகிறது. வெளிவரவிருக்கும் டபுள் ஐஸ்மார்ட் படத்திற்காக ரூ. 15 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா மற்றும் விளம்பரங்களில் இருந்து வரும் வருமானத்தைத் தவிர, பல வணிகங்களிலும் முதலீடு செய்துள்ளார். சஞ்சய் தத் புரொடக்ஷன்ஸ் மற்றும் த்ரீ டைமன்ஷன் மோஷன் பிக்சர்ஸ் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களை சஞ்சய் தத் நடத்தி வருகிறார். ஜிம்ஆஃப்ரோ (ZimAfro) T10 தொடரில் ஹராரே ஹரிகேன் (Harare Hurricane), LPL தொடரில் பி-லவ் கண்டி (B-Love Kandy) கிரிக்கெட் அணிகளின் இணை உரிமையாளராக இருக்கிறார்.
டான்டவுன், சைபர் மீடியா இந்தியா போன்ற பல்வேறு ஸ்டார்ட்-அப்களிலும் சஞ்சய் தத் முதலீடு செய்துள்ளார். கார்டெல் & பிரதர்ஸ் என்ற மதுபான ஸ்டார்ட்-அப் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனம் தி க்ளென்வாக் என்ற ஸ்காட்ச் விஸ்கியை அறிமுகப்படுத்தியது. அதன் விலை ரூ.1,550.