Allu Arjun Fan Death
கடந்த திங்கள் கிழமை அன்று (டிசம்பர் 9)-ஆம் தேதி, கல்யாணதுர்கம், ராயதுர்கத்தில் புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தை பார்த்து கொண்டிருந்த அல்லு அர்ஜுன் ரசிகர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து PTI செய்தி நிறுவனத்திடம், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) ரவி பாபு, கூறியபோது திரையரங்கில் உயிரிழந்த நபரின் பெயர் ஹரிஜன மதனப்பா என்றும், அவரின் 35 வயது என கூறியுள்ளார்.
Allu Arjun, Pushpa2, Sukumar
அந்த நபர், அவர் மதியம் 2:30 மணியளவில் ராயதுர்கத்தில் மதியக் காட்சிக்குச் தனியாக சென்றதாக தெரிகிறது. திரைப்படம் பார்த்து கொண்டிருக்கும் போதே இவர் இறந்ததால், அவர் ஏதோ படுத்து தூங்குகிறார் என எண்ணி அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். மாலை 6 மணியளவில் தியேட்டரின் துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் போது இவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாக சைத்தாயா திருமணத்தில் அணிந்திருந்த Patek Philippe வாட்ச்; எத்தனை லட்சம் தெரியுமா?
Police Investigating Death
அவர் என்ன காரணத்தால் இறந்தார், யாருடன் வந்தார் உள்ளிட்ட செய்திகளை சேகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Complaint Resisted Against Theater Owner
கூடுதலாக கிடைத்த தகவல்களின்படி, அந்த நபர் குடிபோதையில் இருந்தது உறுதியாகியுள்ளது. கூலி வேலை செய்து வந்த இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். மற்ற பார்வையாளர்களுக்கு சங்கடம் விளைவிக்கும் விதத்தில் அதீத குடிபோதையில் இருந்தவரை ஏன் திரையரங்கில் அனுமதித்தீர்கள் என திரையரங்கு உரிமையாளர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
Allu Arjun And Rashmika Mandanna
அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா நடிப்பில் வெளியாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் தற்போது அடுத்தடுத்து வசூல் சாதனை செய்து வருகிறது. ஒரே வாரத்தில் 1000 கோடி கிளப்பில் இணைந்த படமாகவும் இப்படம் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.