சமந்தாவை விவாகரத்து செய்து ஒரே வருடத்தில் சோபிதா மீது காதலில் விழுந்த நாக சைதன்யா, டிசம்பர் 4 ஆம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார். சமந்தாவை கோவாவில் வைத்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா, சோபிதாவை குடும்ப பாரம்பரிய முறைப்படி 8 மணிநேரம் நடந்த பூஜைக்கு பின்னர், அக்னி சாட்சியாக சோபிதா கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கினார். பின்னர் அக்னியை வலம் வந்து, சோபிதா கால்களில் மெட்டியை அணிவித்தார். இதுகுறித்த புகைப்படங்களையும் இருவரும் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
25
Naga chaitanya and Sobhita Wedding

திருமணத்திற்கு பின்னர் நடிகை சோபிதா அணிந்திருந்த நகை மற்றும் புடவை குறித்து பல தகவல்கள் வெளியானதை பார்க்க முடியாது. ஆனால் ஒரே ஒரு வாட்ச் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார் நாக சைதன்யா.
45
Patek Philippe Watch Speciality
இவர் அணிந்திருந்த Patek Philippe வாட்சின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.68 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. (வரி உட்பட) 70 லட்சம் செலவு செய்து வாங்கப்பட்டுள்ளது. அடர் பழுப்பு நிற டயல் கொண்ட இந்த வாட்சின் ஸ்டார்ப்பை உடைக்கு ஏற்ற போல் மாற்றி கொள்ளலாம். ஒரு கருப்பு ரப்பர் ஸ்ட்ராப் கொண்டு மாடர்ன் உடைகளுக்கு ஏற்ற மாதிரியும், பிளாட்டினம் ஸ்ட்ராப் கொண்டு ட்ரடிஷனல் உடைகளுக்கும் அணிந்து கொள்ளலாம். நாக சைத்தாயா தன்னுடைய பட்டு வேஷ்டி சட்டைக்கு ஏற்றப்போல, பிளாட்டினம் ஸ்ட்ராப்பில் தான் இதை அணிந்திருந்தார்.
இந்த வாட்ச் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாடு சென்றால் கூட நேரத்தை சிரமமின்றி தெரிந்து கொள்ள முடியும். சீதோஷ்ண நிலையை உணர்ந்து அதனை வெளிப்படுத்தும் சிறப்பம்சம் இந்த வாட்சில் உள்ளது. அடிக்கடி பயணிப்பவர்களுக்கு இந்த வாட்ச் மிகவும் பொருத்தமான ஒன்றாக இருக்கும். வாட்டர் ப்ரூப், மற்றும் அரபு மொழி எண்களை கொண்டது. மிகவும் நேர்த்தியான தொழிநுட்பத்துடன் இந்த வாட்ச் டிசைன் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.