'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!

Published : Dec 11, 2024, 04:23 PM ISTUpdated : Dec 11, 2024, 07:15 PM IST

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் இணைய உள்ளதாக கூறப்டுகிறது.  

PREV
15
'கூலி' படத்தில் ரஜினிகாந்துடன் இணையும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
Rajinikanth upcoming film Coolie update

கோலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டாராகவும், வசூல் மன்னனாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'வேட்டையன்' திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதும், விமர்சன ரீதியாகவும்.. வசூல் ரீதியாகவும்.. எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் போனது.

25
Lokesh and Rajinikanth Movie Coolie

இந்த படத்தை தொடர்ந்து, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கூலி' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்னும் 30 சதவீத காட்சிகள் தான் எஞ்சி உள்ளது.

மறைந்த பின்னரும் மனைவிக்கு மரியாதை; கோவில் கட்டி கொண்டாட போகும் மதுரை முத்து!

35
Coolie Movie Update

இப்படத்தில் ரஜினிகாந்த் உடன், நாகார்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சௌபின் சாகீர், போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அதேபோல் உலக நாயகன் கமலஹாசனின் மகளான ஸ்ருதிஹாசனம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யராஜ், ரெபே மோனிகா ஜான் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
 

45
Shruthi Haasan Acting Coolie

அதிரடி ஆக்சன் கதை கதைக்களத்தில், கேங்ஸ்டார் மற்றும் கோல்ட் ஸ்மக்கிலிங் மாஃப்பியாவை மையமாக வைத்து, இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியான போதும், இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சொந்த அண்ணனையே சைட் அடிச்சுருக்கியான்னு கேட்பாங்க? சூர்யா தங்கை பகிர்ந்த சீக்ரெட்!

55
Rajinikanth Aamir Khan

ஆனால் தற்போது தகவலை உறுதி செய்யவும் விதமாக, ஜெய்ப்பூரில் 10 நாட்கள் நடைபெற உள்ள கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அமீர் கான் வந்துள்ளதாகவும், இவர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த சில மணி நேரத்தில் ரஜினிகாந்தும் வந்து சேர்ந்துள்ளார். எனவே இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை தான் லோகி இந்த 10 நாட்கள் படமாக்க உள்ளார் என கூறப்படுகிறது. ஒரு சூப்பர் ஸ்டார் இருந்தாலே படம் பட்டையை கிளப்பும், ஆனால் இந்த முறை கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான், கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திரா, மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, என 4 ஸ்டார்கள் இணைவதால் படம் சும்மா பட்டாசாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!

Recommended Stories