Published : Dec 11, 2024, 03:25 PM ISTUpdated : Dec 11, 2024, 07:16 PM IST
விஜய் டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பிரபலமான, மதுரை முத்து மறைந்த மனைவி லோகா மற்றும் பெற்றோருக்கு சொந்த ஊரில் கோவில் கட்டி வருவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார்.
விஜய் டிவி தொலைக்காட்சி மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறிமுகமாகி, பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் மதுரை முத்து. 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மதுரை தமிழில் எதார்த்தமான கவுண்டர்களை போட்டு இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான மதுரை முது, இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அசத்தப்போவது யாரு, சண்டே காமெடி, போன்ற பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
25
Madurai Muthu Wife Loga
ஒரு சில காமெடி நிகழிகளிலும் நடுவராக இருந்து வருகிறார். குறிப்பாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஒரு குக்காக வந்து, பின்னர் நடுவராக மாறி... தற்போது கோமாளியாகவே மாற்றி விட்டார். விஜய் டிவி இளம் காமெடியன்களான பாலா, புகழ் ஆகியோர் வயசு வித்தியாசம் இன்றி காமெடி செய்தாலும் அதனை சிரித்துக்கொண்டே கடந்து செல்வது இவருடைய தனிச்சிறப்பு என்றே கூறலாம்.
மதுரை முத்து லோகா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். குழந்தை - குடும்பம் என மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவருடைய வாழ்க்கையை அடியோடு திருப்பி போட்டது 2016 ஆம் ஆண்டு நடந்த விபத்து. மதுரை முத்துவின் சொந்த ஊரான அரசம்பட்டிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருக்கும்போது, இவருடைய மனைவி லோக வந்த கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில்சம்பவ இடத்திலேயே லோகா உயிரிழந்தார்.
45
Madurai muthu Second Wife Neethu
இதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து, தன்னுடைய மனைவியின் தோழி நீத்து என்கிற பல் மருத்துவரை மதுரை முத்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். நீத்துவுக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. கடந்தாண்டு சென்னையில் புதிய வீடு ஒன்றைக் கட்டி குடியேறிய மதுரை முத்து, மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து, தன்னுடைய முதல் மனைவி லோகவின் நினைவாகவும், பெற்றோரை நினைவு கூறும் விதத்திலும் சொந்த ஊரான அரச பட்டியில் மதுரை முத்து பெற்றோர் மற்றும் மனைவிக்கு கோவில் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். மேலும் இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறைந்த மனைவி லோகாவுக்கும், பெற்றோருக்கும் மதுரை முத்து கோயில் கட்டி வருவதை ரசிகர்கள் மனதாரா பாராட்டி வருகிறார்கள்.