Dhanush, GV Prakash, Seenu Ramasamy
கோலிவுட்டில் தொடரும் விவாகரத்து
தமிழ் சினிமாவில் விவாகரத்து என்பது தற்போது ஒரு டிரெண்டாக மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் விவாகரத்து முடிவை அறிவித்த பிரபலங்கள் ஏராளம். இயக்குனர் பாலா தன் மனைவி மலரை பிரிந்தார். இதைத்தொடர்ந்து இசையமைப்பாளர் டி இமான் தன் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்து பிரிந்தார். அதேபோல் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடிக்கு இந்த ஆண்டு விவாகரத்து வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி விவாகரத்து முடிவை அறிவித்தனர். நடிகர் ஜெயம் ரவியும் தன் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அந்த லிஸ்ட்டில் தற்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
Director Seenu Ramasamy
யார் இந்த சீனு ராமசாமி?
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சீனு ராமசாமி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கூடல் நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து விஜய் சேதுபதியை வைத்து அவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி 2 தேசிய விருதுகளையும் வென்றது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற படங்களை இயக்கினார் சீனு ராமசாமி.
இதையும் படியுங்கள்... Vairamuthu : "என் இதயத்தை அசைத்த உங்கள் வரிகள்".. சீனு ராமசாமியின் புதிய கவிதை தொகுப்பு - வாழ்த்திய வைரமுத்து!
Seenu Ramasamy Divorce
சீனு ராமசாமி விவாகரத்து
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வரும் சீனு ராமசாமி, கடந்த 2007-ம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி சுமார் 17 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், இன்று திடீரென தாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பையும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சீனு ராமசாமி.
Seenu Ramasamy X Post
சீனு ராமசாமி பதிவு
அதில், “அன்பானவர்களுக்கு வணக்கம்; நானும் எனது மனைவி GS தர்ஷனாவும், எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும், எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்” என பதிவிட்டுள்ளார்.
Seenu Ramasamy announced Divorce
விவாகரத்து சீசனா?
ஏற்கனவே இந்த ஆண்டு ஜெயம் ரவி, ஜிவி பிரகாஷ் ஆகியோரின் விவாகரத்து அறிவிப்புகள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது சீனு ராமசாமியும் இந்த முடிவை எடுத்துள்ளதால் கோலிவுட்டில் இது விவாகரத்து சீசனா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இயக்குனர் சீனு ராமசாமி கைவசம் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் படமும், விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல் திரைப்படமும் உள்ளது.
இதையும் படியுங்கள்... ‘மாமனிதன்’களுக்கு கிடைத்த அங்கீகாரம்... விஜய் சேதுபதி, சீனு ராமசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் அறிவிப்பு