சூப்பர்ஸ்டார் பட்டம் ஒன்னும் ரஜினிக்கு சும்மா கிடைக்கல; அதன் பின்னணி தெரியுமா?

Published : Dec 12, 2024, 09:44 AM IST

Superstar Rajinikanth : நடிகர் ரஜினிகாந்த் இன்றளவும் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். அந்த பட்டம் அவருக்கு கிடைத்தது எப்படி என்பதை பார்க்கலம்.

PREV
15
சூப்பர்ஸ்டார் பட்டம் ஒன்னும் ரஜினிக்கு சும்மா கிடைக்கல; அதன் பின்னணி தெரியுமா?
Rajinikanth

ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் என்கிற வார்த்தையை கேட்டவுடன் ரஜினிகாந்த் மட்டுமே நினைவுக்கு வரும் அளவுக்கு கடந்த 46 வருடங்களாக, இது ரஜினிக்கு வழங்கப்பட்ட பட்டமாக இல்லாமல்; ரஜினியால் பெருமைப்படுகிற பட்டமாக இருந்து வருகிறது. ரஜினி அவ்வளவுதான் அவர் கெரியர் முடிஞ்சிருச்சு என விமர்சனங்கள் வந்தபோதெல்லாம் சினிமாத்துறை எதிர்பார்க்காத கலெக்‌ஷனையும், பிளாக்பஸ்டர் வெற்றிகளையும் கொடுத்து தான் ஏன் சூப்பர்ஸ்டார் என கில்லி மாதிரி சொல்லி அடிப்பார் ரஜினிகாந்த்.

25
Superstar Rajinikanth

ரஜினியின் 48 வருட உழைப்பு

74 வயதான நடிகரை தமிழ் சினிமா ஏன் சூப்பர்ஸ்டாராக கொண்டாடுகிறது என யோசித்தால் அதற்கு அவரின் 48 வருட உழைப்பு தான் பதிலாக இருக்கிறது. 1975-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமான ரஜினிகாந்த்தின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. 

இதையும் படியுங்கள்... ராஜ வாழ்க்கை வாழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?

35
Rajinikanth Birthday

ஒரே வருடத்தில் 21 படம்

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களே ஒரு வருடத்திற்கு 2 அல்லது 3 படங்களில் தான் நடிக்கிறார்கள். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால் 1975-ம் ஆண்டு தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த், தன்னுடைய முதல் 7 வருடத்திலேயே 70 படங்களில் நடித்துவிட்டார்.

45
Interesting Facts about Rajinikanth

சூப்பர்ஸ்டார் பட்டம்

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கடந்த 1978-ம் ஆண்டு மட்டும் ரஜினிகாந்த் நடித்த படங்களின் எண்ணிக்கை 21. அந்த வருடத்தில் வெளிவந்த பைரவி படத்தின் மூலம் தான் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமானார் ரஜினிகாந்த். அப்படம் ரிலீஸ் ஆனபோது சூப்பர்ஸ்டார் என்கிற அடைமொழி உடன் அப்படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தான் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டார் ரஜினி.

55
How Rajinikanth Become Superstar

ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்

ஒருவரை சினிமா ரசிகர்கள் 45 வருடங்களுக்கு மேலாக சூப்பர்ஸ்டாராக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அது ரஜினியாக மட்டுமே இருக்க முடியும் என சொல்லப்படுது. வெறும் வெற்றியால் மட்டும் அவர் இந்த உயரத்தை எட்டவில்லை. அந்த வெற்றிகள் பெரும் வெற்றிகளாக இருந்ததே ரஜினியின் இந்த சூப்பர்ஸ்டார் இமேஜ் இன்றளவும் நிலைத்திருக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இதனால் தான் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு ஏற்ற நபராக ரஜினி திகழ்ந்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... ஜெயிலர் 2, கூலியை விட ரஜினி பிறந்தநாளன்று வரவுள்ள செம ஒர்த்தான அப்டேட் என்ன தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories