கடந்த இரு தினங்களுக்கு முன்பு, விஜய் டிவி சீரியல் நடிகையும், பல்வேறு விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை காட்டி வரும் மைனா நந்தினி மற்றும் அவருடைய கணவர் புதிய கார் வாங்கிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்தனர்.
25
இவர்களை தொடர்ந்து, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றவரும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 90 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து விளையாடிய அஜீத் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த காரின் மதிப்பு 22 லட்சம் என கூறப்படுகிறது. இதை அடுத்து புதிய கார் வாங்கிய ஆஜித்துக்கு சக போட்டியாளர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதுவரை ஷிவானி நாராயணன், தாடி பாலாஜி, மணிமேகலை, சரத், கேப்ரில்லா, மைனா நந்தினி, ஆஜித், புகழ், என புதிய கார் வாங்கும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.