nayanthara marriage photos : பின்வாங்கிய பிரபல நிறுவனம்..கடுப்பாகி திருமண புகைப்படங்களை வெளியிடும் நயன்தாரா!

First Published | Jul 11, 2022, 3:00 PM IST

nayanthara marriage photos : பிரபல நிறுவனம் விலகி விட்டால் என்ன அடுத்த நிறுவனத்திடம் விலை பேசலாம் என்று எண்ணிய போதிலும், ஒரு மாதம் கழித்து புகைப்படங்களை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்துவிடும் என்கிற காரணத்தாலும் இந்த புகைப்படங்களை இவர்களே வெளியிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது. 

Nayanthara vignesh shivan wedding photos

ஏழு வருட காதலர்களாக இருந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மணவறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு தேவதை போல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார் லேடி சூப்பர் ஸ்டார்.  சிவப்பு வண்ண உடைகள் வைரம் பதித்த பெரிய மாலை அணிந்து அழகின் உருவாக வந்திருந்தார்.

Nayanthara vignesh shivan wedding photos

மணமகன் விக்னேஷ் சிவன் தங்க நிற உடை அணிந்து ஜொலித்திருந்தார். இவர்களது திருமணத்திற்கு ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையிலான முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். தடபுடலான விருந்துகளுடன் நடைபெற்ற இவர்களது திருமணம் குறித்த பேச்சு இன்னும் அடங்கவில்லை.

மேலும் செய்திகளுக்கு...மும்பையில் கவர்ச்சி நடிகையுடன் திடீர் சந்திப்பு... வைரலாகும் விக்கி - நயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

Tap to resize

Nayanthara vignesh shivan wedding photos

இதன்பின்னர் தாய்லாந்துக்கு தேனிலவு கொண்டாட சென்ற நயன் - விக்கி புகைப்படங்களை  அவ்வப்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டால் பதிவு செய்து வைரலாக்கி வந்தார். இந்த அழகிய புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.இந்நிலையில் திருமணம்  முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்து அதாவது  கடந்த ஒன்பதாம் தேதி முதல்விக்கி திருமணம் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...12 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - உதயநிதி...நன்றி தெரிவித்த நாயகன் !

Nayanthara vignesh shivan wedding photos

ஒரு மாதம் கழித்து ஏன் தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளது மட்டுமே வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன் தற்போது ரஜினி முதல் ஏ ஆர் ரகுமான், அனிருத், ஷாருக்கான், அட்லீ என பிரபலங்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Nayanthara vignesh shivan wedding photos

ரஜினிகாந்த், மணிரத்னம், விஜய் சேதுபதி,அனிருத், சூர்யா, ஷாருக்கான், அட்லி என முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இவர்களது திருமணத்திற்கு 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் 30 விவிஐபிக்களும் அடங்குவர். அவர்களுக்கு தரப்பட்ட பத்திரிக்கையில் கியூ ஆர் கோடு கொடுக்கப்பட்டிருந்தது. டைட் செக்யூரிட்டி உடன்  நடைபெற்ற இவர்களது திருமணம் குறித்த எந்த புகைப்படமோ, காட்சியோ வெளியாகாமல் இருக்கவே இந்த பாதுகாப்பை தம்பதிகள் ஏற்படுத்தியிருந்தததாக சொல்லப்பட்டது

மேலும் செய்திகளுக்கு...தி க்ரே மேன் படம் குறித்து ஓப்பனாக பேசிய தனுஷ்.. வாய்ப்பை கேட்டதும் துள்ளி குதித்ததாக பேட்டி

nayanthara vignesh shivan wedding

அதோடு  தங்களது திருமணத்தை பிரபல ஓடிடித்தளமான netflix மூலம் வெளியிட முடிவு செய்த நயன்தாரா விக்னேஷ் சிவன் அந்த நிறுவனத்துடன் விலை பேசி உள்ளனர். சுமார் 25 கோடி கொடுத்தால் தங்களது திருமண வீடியோக்களை தருவதாக பேசி உள்ளனர். ஆனால் தற்பொழுது நெட்ஃபிலிக்ஸ்  தங்களுக்கு இந்த தொகை கட்டுப்படியாகாது என பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.

nayanthara vignesh shivan wedding

 இதனால் கடுப்பான ஜோடி தங்களது திருமண புகைப்படங்களை இன்ஸ்டா மூலமே வெளியிட்டு வருகின்றனர். அதுவும் ஒரு மாதம் கழித்து. மேலும் பிரபல நிறுவனம் விலகி விட்டால் என்ன அடுத்த நிறுவனத்திடம் விலை பேசலாம் என்று எண்ணிய போதிலும், ஒரு மாதம் கழித்து புகைப்படங்களை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு குறைந்துவிடும் என்கிற காரணத்தாலும் இந்த புகைப்படங்களை இவர்களே வெளியிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது. 

nayanthara vignesh shivan wedding

என்னவாக இருந்தாலும் பிரபலங்கள் கலந்து கொண்ட நயன் - விக்கி திருமண புகைப்படங்கள் தற்போது தாறுமாறாக வைரலாகத்  தான் செய்கிறது.

Latest Videos

click me!