லவ் லெட்டர் எழுதி பெற்றோரிடம் செமத்தியாக அடிவாங்கிய சாய் பல்லவி... அதுவும் யாருக்கு எழுதிருக்காங்க தெரியுமா?

Published : Jul 11, 2022, 02:05 PM IST

Sai Pallavi : நடிகை சாய் பல்லவி நடித்துள்ள கார்கி என்கிற திரைப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிடுகிறது.

PREV
14
லவ் லெட்டர் எழுதி பெற்றோரிடம் செமத்தியாக அடிவாங்கிய சாய் பல்லவி... அதுவும் யாருக்கு எழுதிருக்காங்க தெரியுமா?

பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சாய் பல்லவி, இதையடுத்து தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து, குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவருக்கு தெலுங்கு திரையுலகில் அதிக மவுசு உண்டு, இதனால் அந்த மொழி படங்களில் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்.. நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸுக்கு சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது

24

நடிகை சாய் பல்லவி நடிப்பில் அண்மையில் வெளியான படம் விராட பருவம். இப்படத்தில் அவர் பெண் நக்சலைட்டாக நடித்திருந்தார். இதில் நடிகர் ராணாவுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், சாய் பல்லவியின் துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

இதையும் படியுங்கள்.. 12 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - உதயநிதி...நன்றி தெரிவித்த நாயகன் !

34

இதனிடையே இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் ஓடிடி ரிலீஸை ஒட்டி, ஒரு புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராணாவுடன் கலந்துகொண்டார் சாய் பல்லவி. அப்போது தனது பள்ளிப்பருவத்தில் காதல் கடிதம் எழுதி பெற்றோரிடம் அடிவாங்கிய சம்பவம் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்.. காதலுக்காக நிறைய பொய்... பித்தலாட்டம்!! தண்டனை அனுபவிக்க தயார் ஆகிறேன் - பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!

44

அதில் அவர் கூறியதாவது : “நான் 7-ம் வகுப்பு படிக்கும் போது, காதல் கடிதம் எழுதி உள்ளேன். என்னுடன் படித்த ஒரு பையனுக்கு அந்த காதல் கடிதத்தை எழுதி இருந்தேன். அறியாத வயதில் அந்த கடிதம் எழுதியதை பார்த்த எனது பெற்றோர், என்னை செம்மத்தியாக அடித்தனர். மற்றபடி வேறு யாருக்கு கடிதம் எழுதியதில்லை” எனக்கூறினார். அவர் நடித்துள்ள கார்கி என்கிற திரைப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories