12 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு - உதயநிதி...நன்றி தெரிவித்த நாயகன் !

First Published | Jul 11, 2022, 1:04 PM IST

மாறுபட்ட தோற்றத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது.

vendhu thanindhathu kaadu

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியான "மாநாடு" வெற்றி பெற்ற படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பி. ஜெயமோகன் எழுத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஐசரி கே கணேஷ் தயாரித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...உதயநிதி மகனுக்கு திடீரென வந்த ஹீரோ ஆசை.. தந்தை ரூட்டில் செல்கிறாரா இன்பநிதி? - கிருத்திகா சொன்ன சுவாரஸ்ய தகவல்

சிம்புவுடன், ராதிகா சரத்குமார், ஏஞ்சலினா ஆப்பிரிக்கா,  சித்திக் , நீரஜ் மாதவ் மற்றும் ஏஞ்சலினா ஆபிரகாம், சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

vendhu thanindhathu kaadu

இந்த படத்தில் முத்துவாக வரும் சிலம்பரசன் இந்த படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார். இவரது அப்போது வெளியான சிம்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகுந்த வருத்தம் தெரிவிக்கும் அளவிற்கு உடல் மாற்றத்தை கொண்டிருந்தார் நாயகன்.

மேலும் செய்திகளுக்கு...ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் விஜய்..! சம்பள விவகாரம் குறித்து வெளியான தகவல்..!

கடந்த 2018 ஆம் ஆண்டு வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இந்த படம் அறிவிக்கப்பட்டது. முதல் படத்தை அடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் தயாராவது குறித்து அப்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.

Tap to resize

vendhu thanindhathu kaadu

ஆனால் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து இந்த படம் முழு உருவாக்கத்தை பெற்றுள்ளது. இதில் இருந்து "காலத்திற்கும் நீ வேணும்" முத்துவின் பயணம் ஆகி இரு பாடல்கள் வெளியாகின. இந்த பாடல் வரிகளை தாமரை எழுதியிருந்தார். காலத்துக்கு நீ வேணும் எனும் பாடலை சிலம்பரசனம், முத்துவின் பயணம் எனும் பாடலை ஏ ஆர் ரகுமான் பாடியிருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...பாரிஸில் அஜித்தை பார்க்க அலைமோதிய கூட்டம்... டென்ஷனே ஆகாமல் ஏகே என்ன செய்தார் தெரியுமா? - வைரல் வீடியோ

முன்னதாக அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வரை சிலம்பரசன் அடுத்த படத்தில் நடிக்க கூடாது என தயாரிப்பள்ள சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகுந்த சிக்கலுக்கு உள்ளானது. பின்னர் ஒரு வழியாக கடந்த ஆண்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கியாது. தயாரிப்பாளர் சங்கத்தில் நஷ்ட ஈடு கொடுப்பாதாக சிம்பு உறுதி அளித்ததை உரிய அளித்தது தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது.

Vendhu Thanindhathu Kaadu

மாறுபட்ட தோற்றத்தில் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கியுள்ளது. இது குறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ள சிலம்பரசன் 12 ஆண்டுகள் கழித்து உங்களுடன் இணைவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!