சமீப காலமாக முன்னணி நடிகர்கள் மற்ற நடிகர்களின் படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'விக்ரம்' படத்திலும், மாதவனின் 'ராக்கெட்ரி' படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார். இந்த இரு படங்களில் நடிப்பதாகவும் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறாமல் சூர்யா நடித்தார் என்ற செய்திகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.
தற்போது சூர்யா பாணியிலேயே நடிகர் விஜயும் ஒரு ரூபாய் சம்பளம் கூட வாங்காமல், ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து மூன்று முறை, விஜய்யை வைத்து இயக்கிய அட்லீ நீண்ட இடைவெளிக்கு பின்னர், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி நிலையில், அவ்வபோது இந்த படம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
மேலும் செய்திகள்: காதலுக்காக நிறைய பொய்... பித்தலாட்டம்!! தண்டனை அனுபவிக்க தயார் ஆகிறேன் - பாக்கியலட்சுமி கோபி வெளியிட்ட வீடியோ!