விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக தற்போது பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பாராத திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது .
கோபிக்கு விபத்து ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் இருக்கும் போது ராதிகா, மருத்துவமனைக்கு வந்து கோபியை பார்க்கிறார். நான் தான் கோபியின் மனைவி என அவருடைய மருத்துவ செலவுக்கான பணத்தையும் செலுத்துகிறார். மேலும் இருவரும் பேசியதை பாக்கியா பார்த்து விடுவது மட்டும் இன்றி, டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த கோபியிடம் பல கேள்விகளை கேட்டு குற்றவாளியாக்குகிறார்.
அதே போல்... கணவனை விட்டு பிரிந்து கோபியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்த ராதிகா திருமணம் செய்து கொள்வாரா? என்பது போன்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
அந்த வீடியோவில், அனைவருக்கும் காலை வணக்கம் கூறிபேச தொடங்கும் கோபி, தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களுக்கு நன்றி என கூறுகிறார். தொடர்ந்து பேசுகையில்... "அடுத்து 1 வாரத்திற்கு செய்த தப்புக்கு குற்றவாளியாக தண்டனை அனுபவிக்க தயார் ஆகுகிறேன். பாவம் கோபி என்ன பண்ண முடியும். காதலுக்காக நிறைய பொய் பித்தலாட்டங்களை செய்து இருக்கிறார். அதற்கு அனுபவிச்சு தான் ஆகணும். வயசானால் காதல் பண்ண கூடாது, அப்படியெல்லாம் சட்டம் இருக்கு, என்ன பண்ணுவது...ஓகே நன்றி” என கூறி தன்னுடைய வீடியோவை முடித்துள்ளார்.
ஏற்கனவே படு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாகவே தற்போது இந்த வீடியோவை சதீஷ் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.