மாதவிடாய் நாட்களில் தான் மாரி படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடலில் நடனமாடியதாக தெரிவித்துள்ள சாய் பல்லவி. அந்த பிரச்சனையையும் தாண்டி நடனமாடியதனால் தான் அப்பாடல் இன்று பல மில்லியன் பார்வைகளைக் கடந்து கொண்டாட வைத்துள்ளது. ஷியாம் ஷிங்கா ராய் படம் தவிர நான் நடித்த அனைத்து படங்களிலும் நடனக் காட்சி படமாக்கப்பட்டபோது எனக்கு மாதவிடாய் நாட்களாகத்தான் இருந்துள்ளது. அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், அதற்கேற்றார் போல் தனது உடலை தயார்படுத்திக் கொண்டு நடித்ததாக சாய்பல்லவி கூறி உள்ளார்.