கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதன மூலம் எம்.எல்.ஏ ஆன உதயநிதி, அதன்பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். அவர் சினிமாவில் இருந்து விலக உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதிக்கு ஹீரோ ஆசை வந்துள்ளதாக அவரது தாய் கிருத்திகா சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... அட..ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் மஹ்லகா ஜபேரி...இதோ..கிக் போட்டோஸ்!
அதில் அவர் கூறியதாவது : “கால்பந்தாட்டத்தில் ஆர்வம் காட்டி வரும் இன்பநிதி, சமீப காலமாக தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளார். அதிகாலை 4 மணிக்கெல்லாம் தியேட்டர்ல படம் போடுவாங்களானு கேட்டு, விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு போயிட்டு வந்தான். ரீசண்டா என்னிடம் வந்து நான் வேணா சினிமால நடிக்கட்டுமா அம்மானு என்கிட்ட கேட்டான், நான் அதெல்லாம் ஈஸியான வேலையில்ல, பர்ஸ்ட் படிப்பெல்லாம் முடிங்க, அதுக்கப்புறம் யோசிக்கலாம்னு சொல்லிட்டேன்” என கூறினார்.