ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ..டிராக் லிஸ்டை வெளியிட்ட விக்ரமின் கோப்ரா படக்குழு..

Published : Jul 10, 2022, 03:02 PM ISTUpdated : Jul 10, 2022, 03:04 PM IST

தும்பித்துள்ளல், அதிரா, உயிர் உருகுதே, தரங்கிணி, ஏலே இளஞ்சிங்கமே ஆகிய ஐந்து பாடல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் விக்ரம் மற்றும் ஏ ஆர் ரகுமான் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
14
ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ..டிராக் லிஸ்டை வெளியிட்ட விக்ரமின் கோப்ரா படக்குழு..
cobra music list

சீயான் விக்ரம் தற்போது நடித்து முடித்துள்ள கோப்ரா படம் ரிலீஸ்க்கு  தயாராக உள்ளது. வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்த படம் உலக அளவில் திரையிடப்பட உள்ளதாக பட குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது.. அஜய் ஞானமுத்து எழுதிய இயக்கியுள்ள இந்த படம் ஆக்சன் திரில்லராக உருவாக்கியது.

மேலும் செய்திகளுக்கு..."ஒரு நாள் முழுக்க குதிரையிலிருந்து பயிற்சி எடுத்தார்" விக்ரமின் டெடிக்கேஷனை பகிர்ந்த நிழல்கள் ரவி!

இதில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி , இர்பான் பதான் , மியா ஜார்ஜ் , ரோஷன் மேத்யூ , சர்ஜனோ காலித் , பத்மப்ரியா , முகமது அலி பெய்க் ,கனிஹா, மிர்னாலினி ரவி , மீனாட்சி,  கே.எஸ்.ரவிக்குமார் . உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

24
cobra music list

இந்த படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் பதான் மற்றும் ஸ்ரீநிதி செட்டி காலித் மற்றும் மேத்யூ ஆகியோர் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமாகின்றனர். ஸ்ரீநிதி செட்டி கே ஜி எஃப் படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு...அட..ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் மஹ்லகா ஜபேரி...இதோ..கிக் போட்டோஸ்!

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு தயாரிப்பிற்கு வந்த இந்த படத்தின் முதல் பார்வை அந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

34
cobra music list

ஏற்கனவே விக்ரமின் புதிய மன்னர்கள், ராவணன், ஐ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஏ ஆர் ரகுமான் நான்காவது முறையாக சீயானின் படத்தில் இசையமைத்துள்ளார். இதன் பாடல்களை தாமரை, பா.விஜய் மற்றும் விவேக் எழுதியுள்ளனர். தும்பி துள்ளல் என்ற தலைப்பில் முதல் பாடல் கடந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியானது.

மேலும் செய்திகளுக்கு...வாவ் 6 வாரங்களை தொட்ட விக்ரம்..கொண்டாட்டத்தில் படக்குழு..

 இதை அடுத்து நாளை படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெறும் என்று இயக்குனர் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கிடையே நாயகன் விக்ரம் திடீரென ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பி உள்ளார். இவர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா என்பதே சந்தேகமாக உள்ளது.

44
cobra music list

இந்நிலையில்  பட குழு கோப்ரா படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்கள் குறித்த லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. இந்த ஐந்து பாடல்கள்  நாளை ஆடியோ வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி தும்பித்துள்ளல், அதிரா, உயிர் உருகுதே, தரங்கிணி, ஏலே இளஞ்சிங்கமே ஆகிய ஐந்து பாடல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் விக்ரம் மற்றும் ஏ ஆர் ரகுமான் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories