வாவ் 6 வாரங்களை தொட்ட விக்ரம்..கொண்டாட்டத்தில் படக்குழு..

Published : Jul 10, 2022, 02:25 PM IST

திரையரங்குகளில் விக்ரம் வெற்றிகரமாக தனது ஆறாவது வாரத்தில் கால் பதிப்பதாக பட குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்து வருகின்றனர்

PREV
14
வாவ் 6 வாரங்களை தொட்ட விக்ரம்..கொண்டாட்டத்தில் படக்குழு..
vikram update

விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு அடுத்ததாக மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது. இவர் உலகநாயகன் கமலஹாசனை வைத்த படம் இயக்கும் புதிய வாய்ப்பினை பெற்றார். கமலுக்கு என கதை எழுத முடிவு செய்த லோகேஷ். படம் மல்டி ஸ்டார் படமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதன்படி கமலுக்கு எதிர் நாயகனாக விஜய் சேதுபதியையும் மலையாளத்திலிருந்து பகத் பாஸிலையும் இறக்கி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..அட..ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் மஹ்லகா ஜபேரி...இதோ..கிக் போட்டோஸ்!

24
vikram update

போதைப் பொருள் கும்பலை ஒடுக்கும் முயற்சியில் மகனை இழக்கும் ராணுவ வீரரின் கமலின் சாகசமாகவே இந்த படம் அமைந்தது. முந்தைய விக்ரமின் தொடர்ச்சி என கூறப்படும் இதில்  ஆக்ஷன் அனல் படந்திருந்தது.

மேலும் செய்திகளுக்கு.."ஒரு நாள் முழுக்க குதிரையிலிருந்து பயிற்சி எடுத்தார்" விக்ரமின் டெடிக்கேஷனை பகிர்ந்த நிழல்கள் ரவி!

மற்ற  படங்கள் போல் இதில் நாயகியோ, ரொமான்ஸோ, லவ் சாங்கோ கிடையாது. மாறாக முழுவதும் ஆக்சன் மட்டுமே இருந்தது. துப்பாக்கி சத்தம், இரத்த களரி என பான் இந்திய மூவியாக விக்ரம் பான் மொழிகளில்  உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.

34
vikram update

முதலில் விஜய் சேதுபதி, பகத் பாஸில் மட்டுமே வில்லன் என குறிப்பிடப்பட்டது. இதன் இறுதி நேர திருப்பு முனையாக முதல்முறையாக சூர்யா வில்லன் தோற்றத்தில் வருவதாக கூறப்பட்டது. வெறும் பத்து நிமிடமே வந்தாலும் தரமான சம்பவமாக இறங்கினார் ரோலக்ஸ் என்னும் சூர்யா.

மேலும் செய்திகளுக்கு..வேஷ்டி, அணியவேண்டாம்.. கட்டளையிட்ட மணிரத்னம்.. புது குண்டை போட்ட ப்ளூசட்டை மாறன்!

மேலும் விக்ரமின் அடுத்த பாகம் மற்றும் கைதியின் அடுத்த பாகத்திற்கான துணுக்குகளையும் விக்ரம் படத்திலேயே கொடுத்து விட்டார் இயக்குனர். கடந்த மாதம் மூன்றாம் தேதி வெளியான இந்த படம் சுமார் 442 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

44
vikram update

இந்நிலைகள் திரையரங்குகளில் விக்ரம் வெற்றிகரமாக தனது ஆறாவது வாரத்தில் கால் பதிப்பதாக பட குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இயக்குனர், துணை இயக்குனர் மற்றும் ரோலக்ஸ்  சூர்யாவிற்கு அன்புப் பரிசுகளை வழங்கி இருந்தார் கமல்.

Read more Photos on
click me!

Recommended Stories