chandramukhi 2
பி. வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், வடிவேலு நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தை பற்றிய தகவல் வருகின்ற நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2005ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
chandramukhi 2
இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். மேலும் வடிவேலு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை லைகா தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது.
chandramukhi 2
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் , இதன், இரண்டாம் பாகம் முழுவதும் சந்திரமுகி, வேட்டையன் ராஜா கதாபாத்திரங்களை காட்டப்போகிறார்களாம். படம் முழுக்க வேட்டையன் மன்னன், சந்திரமுகி இடையே நடக்கும் மோதல் தான் என்று கூறப்படுகிறது.