காதல் மனைவி நஸ்ரியா உடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய பகத் பாசில் - வைரலாகும் போட்டோஸ்

Published : Jul 11, 2022, 09:13 AM ISTUpdated : Jul 11, 2022, 09:17 AM IST

நடிகை நஸ்ரியா, தனது காதல் கணவர் பகத் பாசில் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து பக்ரீத் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

PREV
17
காதல் மனைவி நஸ்ரியா உடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய பகத் பாசில் - வைரலாகும் போட்டோஸ்

அட்லீ இயக்கிய ராஜா ராணி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நஸ்ரியா. இதையடுத்து தனுஷுடன் நையாண்டி, ஜெய்க்கு ஜோடியாக திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா சினிமாவில் பேமஸான நடிகையாக வளர்ந்து வரும் சமயத்தில் திருமணம் செய்துகொண்டதோடு நடிப்புக்கும் முழுக்கு போட்டார்.

27

இவர் கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் மலையாளத்தில் வெளியான பெங்களூரு டேஸ் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். 

இதையும் படியுங்கள்... நடிகர் பிரபுதேவாவுக்கு இவ்வளவு பெரிய மகனா...! தாடி மீசையுடன் அச்சு அசல் தந்தை போலவே இருக்கும் போட்டோ வைரல்

37

இப்படத்தின் போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இப்படம் சக்சஸ் ஆனதைப் போல் இவர்களது காதலும் சக்சஸ் ஆகி திருமண பந்தத்தில் இணைந்தது.

47

திருமணத்திற்கு பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்ட நடிகை நஸ்ரியா, இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். நஸ்ரியா - பகத் பாசில் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இதையும் படியுங்கள்... உதயநிதி மகனுக்கு திடீரென வந்த ஹீரோ ஆசை.. தந்தை ரூட்டில் செல்கிறாரா இன்பநிதி? - கிருத்திகா சொன்ன சுவாரஸ்ய தகவல்

57

திருமணத்துக்கு பின் சுமார் 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, கடந்த 2019-ம் ஆண்டு வெளியான டிரான்ஸ் படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். இப்படத்திலும் அவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

67

இதையடுத்து சமீபத்தில் அண்டே சுந்தரநிகி என்கிற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நஸ்ரியா. கடந்த சில வாரங்களுக்கு முன் ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்... வேஷ்டி, அணியவேண்டாம்.. கட்டளையிட்ட மணிரத்னம்.. புது குண்டை போட்ட ப்ளூசட்டை மாறன்!

77

இந்நிலையில், நேற்று பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகை நஸ்ரியாவும், தனது கணவர் பகத் பாசில் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து பக்ரீத் பண்டிகையை கொண்டாடி உள்ளார். அதன் புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

click me!

Recommended Stories