ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த அட்லீ, தற்போது ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படியுங்கள்... புது கார் வாங்கிய மைனா நந்தினி..இத்தனை லட்சத்தில் சொகுசு காரா?
இந்நிலையில், நடிகர் விஜய்யும் ஜவான் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயும் விஜய்யும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் என்கிற இந்தி படத்தில் அக்ஷய் குமார் உடன் இணைந்து பாடலுக்கு நடனமாடி உள்ள விஜய், தற்போது ஜவான் படத்துக்காக ஷாருக்கான் உடன் இணைந்து மாஸான கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலெக்ஸ் கேரக்டர் போல் இதுவும் செம்ம மாஸான ரோலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.