vijay sethupathi : விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் நடித்து அசத்திய நடிகர் விஜய் சேதுபதி, சூர்யாவின் ரோலெக்ஸ் கேரக்டர் குறித்து சமீபத்திய பேட்டியில் புகழ்ந்து பேசி உள்ளார்.
கமல் நடிப்பில் கடந்த மாதம் வெளியான விக்ரம் படம் அமோக வரவேற்பை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இதன் வெற்றிக்கும் பெரும் பலமாக இருந்தது இப்படத்தின் கதாபாத்திரங்களின் தேர்வு தான். விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் என அனைவரது கதாபாத்திரமும் மக்கள் மனதில் நிற்கும்படி இருந்தது.
குறிப்பாக சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அவர் இப்படத்தில் கடைசி 5 நிமிடங்கள் மட்டுமே வந்தாலும், அவரது கதாபாத்திரம் மக்களிடையே ஈஸியாக ரீச் ஆகிவிட்டது. இதற்கு காரணம் அவரது நடிப்பு தான் என்றே சொல்லாம். பல்வேறு திரையுலக பிரபலங்களும் சூர்யாவின் கேரக்டரை வியந்து பாராட்டினர்.
இந்நிலையில், விக்ரம் படத்தில் சந்தனம் கேரக்டரில் நடித்து அசத்திய நடிகர் விஜய் சேதுபதி, சூர்யாவின் ரோலெக்ஸ் கேரக்டர் குறித்து சமீபத்திய பேட்டியில் வியந்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது : “ரோலெக்ஸ் கேரக்டர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாடி தான் அந்த ரோலில் சூர்யா நடிக்கப்போற விஷயமே எனக்கு தெரியும். கேட்டதும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
ஏனென்றால் இவ்ளோ பெரிய மாஸ் ஹீரோ, அதுவும் நல்ல பெயர் எடுத்த ஒரு ஹீரோ எப்படி இந்த நெகடிவ் ரோலில் நடிக்க சம்மதித்தார் என வியப்பாக இருந்தது. சூர்யா தனக்கு இருக்கு நட்சத்திர அந்தஸ்தை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு இப்படி ஒரு கேரக்டரில் நடித்ததெல்லாம் பெரிய விஷயம். இதுவும் நன்றாக தான் இருக்கிறது” என புகழ்ந்து தள்ளியுள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.