விவாகரத்தான நடிகையுடன் திருமணம்! பத்தே மாதத்தில் வளைகாப்பு; சன் டிவி சீரியல் ஹீரோவுக்கு குவியும் வாழ்த்து!

Published : Dec 03, 2024, 12:14 PM IST

பிரபல சன் டிவி சீரியல் ஹீரோவுக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்க உள்ள நிலையில் தற்போது தன்னுடைய காதல் மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

PREV
19
விவாகரத்தான நடிகையுடன் திருமணம்! பத்தே மாதத்தில் வளைகாப்பு; சன் டிவி சீரியல் ஹீரோவுக்கு குவியும் வாழ்த்து!
Nivedhitha Baby Shower

சீரியல் நடிகை நிவேதிதா பங்கஜ் மற்றும் சீரியல் நடிகர் சுரேந்தர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நிவேதிதாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை, நிவேதிதா வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

29
Nivedhitha and Surendar Couple

ஏராளமான சீரியல்களில், குணசித்ர வேடத்தில் நடித்து பிரபலமானவர் நிவேதிதா பங்கஜ். இவர் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு, மகராசி சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலமான எஸ்.எஸ்.ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கீர்த்தி சுரேஷ் மீது ஏற்பட்ட காதல்! குடும்பத்தோடு பெண் கேட்டு சென்று பல்பு வாங்கிய 47 வயது நடிகர்!

39
Nivedhitha First Marriage

நிவேதிதா - எஸ்.எஸ்.ஆரியன் திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில், இவர்களின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஆனால் இருவரும் ஓரிரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ துவங்கினர்.

49
Nivedhitha Thirumagal Serial

நிவேதிதா மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார். அப்போது தான் 'திருமகள்' என்கிற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது இந்த சீரியலின் ஹீரோ சுரேந்திரர் மற்றும் நிவேதிதா இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. 

சில்க் ஸ்மிதாவுக்கு மகன் இருக்கிறாரா? தற்கொலைக் கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?

59
Thirumagal serial hero Surendar

இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வந்த நிலையில், பின்னர் தங்களின் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு இருவரது காதல் விஷயத்தை அறிவித்தனர். இருவரும் காதலை அறிவித்த ஒரே வாரத்தில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.

69
Nivedhitha and Surendar Wedding

நிவேதிதா பங்கஜ் மற்றும் சுரேந்தர் திருமணம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நிலையில்.. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் சுரேந்தர் - நிவேதிதா ஜோடி இருவரும் பெற்றோர் ஆக உள்ளதை அறிவித்தனர்.

மத் தீவில் பங்களா; விதவிதமான கார் என ராஜ வாழ்க்கை வாழும் விக்ராந்த் மாஸ்ஸியின் சொத்து மதிப்பு!

79
Nivedhitha and Surendar Photos

தன்னுடைய கர்ப்ப காலத்தை அனுபவித்து வரும் நிவேதிதா, அடிக்கடி தன்னுடைய கணவருடன் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி 10 மாதமே ஆகும் நிலையில், மனைவி நிவேதிதாவுக்கு சுரேந்தர் வளைகாப்பு நடத்தி அழகு பார்த்துள்ளார்.

89
Nivedhitha and Surendar Blessed Parenting

நிவேதிதாவின் வளைகாப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வாழ்த்துக்களை குவித்து வருகிறது. சுரேந்தர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!

99
Nivedhitha and Surendar Happy Moments

சுரேந்தருக்கு இது முதல் திருமணம் என்றாலும், நிவேதிதாவுக்கு இரண்டாது திருமணம் ஆகும். நிவேதிதாவின் முன்னாள் கணவர் எஸ்.எஸ்.ஆரியன் தன்னுடன் மகராசி சீரியலில் நடித்த ஸ்ரித்திகாவை இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கூடிய விரைவில் இவர்களும், குட் நியூஸ் சொல்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

click me!

Recommended Stories