
நடிகை கீர்த்தி சுரேஷ், இந்த மாதம் தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டில் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். எனவே அவரை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பிரபல நடிகர் ஒருவர் அவரை பெண் கேட்டு சென்ற தகவல் சுமார் 7 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகியுள்ளது.
பழம்பெரும் நடிகர் - நடிகைகளின் வாரிசுகள் திரை உலகில் அறிமுகமாவது, காலம் காலமாக நடந்து வருவது தான். ஆனால் ஒரு சில பிரபலங்களின் வாரிசுகள் மட்டுமே திரை உலகில் நிலையான இடத்தை பிடிக்கின்றனர். ஒரு சிலர் அறிமுகமான சில வருடங்களில் காணாமல் போய் விடுகின்றனர். இன்னும் சிலர் நிலையான இடத்தை பிடிக்க, தொடர்ந்து போராடி வருவதையும் பார்க்க முடிகிறது.
சில்க் ஸ்மிதாவுக்கு மகன் இருக்கிறாரா? தற்கொலைக் கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?
அந்த வகையில் நடிகை ராதாவின் மகள்களான கார்த்திகா மற்றும் துளசி என இருவருமே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது திரையுலகை விட்டேன் மொத்தமாக ஒதுங்கி விட்டனர். நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா திரைப்படத்தில் அறிமுகமானாலும், அந்த படம் வெளியாகாததால் தற்போது சீரியலில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி நிலையான இடத்தை பிடிக்க முடியாமல், திருமணத்திற்கு பின்னர் திரையுலகிற்கு குட் பை சொன்னார். சத்யராஜ் மகன் சிபிராஜ், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, முரளி மகன் அதர்வா, போன்ற பலர் நிலையான இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பிரபல நடிகை மேனகாவின் மகள் என்கிற அடையாளத்துடன் திரையுலகில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் சறுக்கலை சந்தித்தாலும், இரண்டே வருடத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த நடிகையாக மாறினார். தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் , பாலிவுட் திரையுலகிலும் கலக்கி வருகிறார். டிசம்பர் 25-ஆம் தேதி, இவர் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக ஹிந்தியில் அறிமுகமாகும் 'பேபி ஜான்' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
ஆப்பாக மாறிய ஆசை! 40 வயசாகியும் திருமணம் செய்து கொள்ளாத ஷங்கர் பட ஹீரோயினா இது?
அதேபோல் தன்னுடைய கெரியரில் உச்சத்தில் இருக்கும் போதே, 32 வயதை கடந்து விட்டதால்... பெற்றோர் சம்மதத்துடன் தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவருடைய திருமணம் ஆண்டனி தட்டில் குடும்ப வழக்கப்படி சர்ச்சில் நடப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்ய வந்த கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமணம் குறித்த தகவலை உறுதி செய்தார்.
கோவாவில் திருமணம் நடப்பதால் குடும்பத்தினர் மட்டுமே இதில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. மேலும் சென்னை அல்லது கேரளாவில் பிரம்மாண்ட திருமண வரவேற்பு ஒன்றையும் நடத்த வாய்ப்பிருப்பதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் நடித்த போது அவர் மீது காதல் வயப்பட்டு பிரபல நடிகர், தன்னுடைய குடும்பத்துடன் சென்று அவரை பெண் கேட்டதாக ஒரு தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் வேறு யாரும் அல்ல 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் தான்.
ஜெயம் ரவி படத்தில் ரிஜெக்ட் செய்யப்பட்ட பாடல்; விஜய்க்கு கொடுத்து ஹிட்டாக்கிய யுகபாரதி!
நடிகர் விஷால் கடந்த 2018 ஆம் ஆண்டு, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடித்த திரைப்படம் சண்டக்கோழி 2. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். விஷாலின் 25 வது திரைப்படம் ஆக இந்த திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கீர்த்தி சுரேஷை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் விஷால் தன்னுடைய காதலை கீர்த்தியிடம் வெளிப்படுத்தாமல்... பெற்றோரிடம் கூறி முறையாக குடும்பத்துடன் பெண் கேட்டுள்ளார். ஆனால் கீர்த்தி சுரேஷ் நீண்ட காலமாக தன்னுடைய நண்பர் ஆண்டனி தட்டிலை காதலித்து வருவதாக கூறி பல்பு கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தன்னுடைய திருமணத்தை முன்னிட்டு, நடிகை கீர்த்தி சுரேஷ் பெரிதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகாமல் உள்ளார். தமிழில் ஏற்கனவே கமிட்டாகி நடித்து வரும் ரிவால்வல் ரீட்டா, கன்னிவெடி, ஆகிய படங்கள் மட்டுமே இவருடைய கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி சீரியல் நடிகைக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்! குவியும் வாழ்த்து!