திருமணமாகி ஓராண்டுக்கு பின் வந்த குட் நியூஸ்; உற்சாகத்தில் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா ஜோடி!

First Published | Dec 3, 2024, 9:19 AM IST

Redin Kingsley wife Sangeetha : காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த ஆண்டு நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவர்கள் குறித்த குட் நியூஸ் வெளியாகி உள்ளது.

Redin Kingsley - Sangeetha

சினிமாவில் சைடு டான்சராக இருந்தவர் தான் ரெடின் கிங்ஸ்லி. இவருக்கு ஒரு டான்சராக அங்கீகாரம் கிடைக்காததால், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய ரெடின் கிங்ஸ்லி, பொருட்காட்சிகளை நடத்தும் காண்ட்ராகடராக உருவெடுத்தார். அதன்மூலம் அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்து வந்தது. தமிழகம் முழுவதும் அரசு சார்பில் நடத்தப்படும் பொருட்காட்சிகளின் காண்ட்ராக்டராக மாறி அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்தார் ரெடின் கிங்ஸ்லி.

Redin Kingsley Wife Sangeetha

இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் உடன் நட்பு ஏற்பட்டு, அவர் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் சீரியஸான காமெடியனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ரெடின் கிங்ஸ்லி. அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததை அடுத்து டாக்டர் படத்திலும் அவரை நகைச்சுவை வேடத்தில் நடிக்க வைத்தார் நெல்சன். அப்படம் தான் ரெடின் கிங்ஸ்லிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யுடன் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிசியான நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார் கிங்ஸ்லி.

இதையும் படியுங்கள்... நாக சைதன்யாவின் வருங்கால மனைவியை விட 10 மடங்கு அதிகம்; சமந்தாவின் சொத்து மதிப்பு இத்தன கோடியா?

Tap to resize

Sangeetha

46 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி, கடந்த ஆண்டு சின்னத்திரை சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று இருந்தாலும் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் கிங்ஸ்லி. 46 வயதில் திருமணம் செய்துகொண்டதால் சில கேலி கிண்டலுக்கும் ஆளானார் கிங்ஸ்லி. இந்த நிலையில், நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Redin Kingsley and Sangeetha

இந்த தகவலை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அண்மையில் நடிகை சங்கீதா சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஆனந்த ராகம் சீரியலில் இருந்து விலகியதன் மூலம் அவர் கர்ப்பமாக இருக்கும் தகவல் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. கர்ப்பமாக இருப்பதால் தான் அவர் சீரியலை விட்டு விலகி இருப்பார் என கூறப்படுகிறது. 47 வயதில் அப்பாவாகப் போகும் ரெடின் கிங்ஸ்லிக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... கதை திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி; ரூ.150 கோடி கேட்டு வந்த நோட்டீஸால் பரபரப்பு!

Latest Videos

click me!