கதை திருட்டு சர்ச்சையில் விடாமுயற்சி; ரூ.150 கோடி கேட்டு வந்த நோட்டீஸால் பரபரப்பு!

First Published | Dec 3, 2024, 8:34 AM IST

Vidaamuyarchi Movie in Trouble : நடிகர் அஜித்குமார் நடிப்பில் பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி வரும் விடாமுயற்சி திரைப்படம் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Vidaamuyarchi

அஜித்தின் 62-வது திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். ஏற்கனவே தடம், மீகாமன், தடையறத் தாக்க போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இவர் தற்போது முதன்முறையாக அஜித்துடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் பிக் பாஸ் ஆரவ், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Ajith Kumar

விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற நிலையில், எஞ்சியுள்ள படப்பிடிப்பை பாங்காக்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக 10 நாட்கள் நடிகர் அஜித் கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரிலீஸ் பணிகளும் ஒருபுறம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் தமிழ் ஹீரோஸின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Tap to resize

Vidaamuyarchi Movie in Trouble

இதனிடையே அண்மையில் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியானது. அந்த டீசரின் மூலம் இப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பது உறுதியாகி உள்ளது. அதுதான் தற்போது அப்படக்குழுவுக்கு தலைவலியாகவும் மாறி இருக்கிறது. லைகா நிறுவனம் நடிகர் அஜித்தின் கால்ஷீட்டை வாங்கிய உடன் அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற அவசரத்தில் பிரேக்டவுன் பட கதையை தேர்வு செய்து, அதை ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கி இருக்கிறது. ஆனால் முறைப்படி அனுமதி வாங்கவில்லையாம்.

Vidaamuyarchi Story Theft Issue

தற்போது அப்படத்தின் டீசர் வெளியானதும் அது ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்பது ஆங்கிலப் பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டதால், அந்த விஷயம் பிரேக்டவுன் படக்குழுவின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. அவர்கள் உடனே விடாமுயற்சி படக்குழுவிடம் ரூ.150 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மி ஒரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டு இருக்கிறார். இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த கதைதிருட்டு விவகாரத்தால் விடாமுயற்சி பட ரிலீசிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கோலிவுட்; விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்ற முதல் நடிகர் யார் தெரியுமா? அஜித் இல்ல!

Latest Videos

click me!