Sobhita Dhulipala
ஷோபிதா துலிபாலா, நாக சைதன்யா ஜோடி காதலித்து வந்த நிலையில், அவர்களின் திருமண விழா நெருங்கி வருவதால் தற்போது திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன.
Sobhita Dhulipala Pelli Kuthuru Ceremony
திங்களன்று ஷோபிதா துலிபாலா வீட்டில் திருமணத்துக்கு முந்தைய சடங்கான பெள்ளிக்குத்துரு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ஷோபிதாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
Sobhita Dhulipala Family
பெள்ளிக்குத்துரு விழாவில் ஷோபிதா மிகவும் மகிழ்ச்சியாகக் காட்சியளித்தார். உறவினர்களுடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். பிராமண சம்பிரதாய முறைப்படி நாக சைதன்யா திருமணம் நடைபெறவுள்ளது. திருமணச் சடங்குகள் 8 மணி நேரம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்.... நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் துவங்கியது! வெளியானது ஹல்தி போட்டோஸ்!
Naga Chaitanya Lover Sobhita Dhulipala
செக்கச் சிவந்த புடவை, ஃபுல் ஸ்லீவ் பிளவுஸ் அதற்கு மேட்சிங்கான நெக்லஸ் அணிந்து மிக அழகாக பெள்ளிக்குத்துரு விழாவில் தோன்றினார் ஷோபிதா. அக்கினேனி குடும்பத்தின் புதிய மருமகள் ஷோபிதாவின் பெள்ளிக்குத்துரு விழா புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகின்றன.
Sobhita Dhulipala Wedding Rituals
டிசம்பர் 4 ஆம் தேதி ஷோபிதா, நாக சைதன்யா ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவில் தெலுங்கு சினிமா பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.