விஜய் மகன் சஞ்சய்யை வெயிட்டா கவனித்த லைகா; முதல் பட சம்பளமே இத்தன கோடியா?

First Published | Dec 3, 2024, 10:35 AM IST

Vijay Son Jason Sanjay Salary : நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ள நிலையில், அவரின் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

Jason sanjay, VIjay

நடிகர் விஜய் கடந்த 1999-ம் ஆண்டு தன்னுடைய ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2000-ம் ஆண்டு ஜேசன் சஞ்சய் என்கிற ஆண் குழந்தையும், 2005-ம் ஆண்டு திவ்யா சாஷா என்கிற பெண் குழந்தையும் பிறந்தனர். இதில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்த பின்னர், சில குறும்படங்களை இயக்கினார். இதையடுத்து அவரை சினிமாவில் நடிகராக்க வேண்டும் என ஆசைப்பட்டார் விஜய்.

Director Jason sanjay

ஆனால் சஞ்சய்க்கு நடிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் அவர் தனக்கு பிடித்த டைரக்‌ஷன் துறையை தேர்வு செய்தார். அவருக்கு முதல் படத்திலேயே ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் இயக்க உள்ள முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அப்படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் ஓராண்டாக வெளியாகாமல் இருந்தது. மேலும் ஹீரோ கிடைக்காமல் விஜய் மகன் திண்டாடி வருவதாகவும் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... கனமழையால் தவிக்கும் மக்கள்; TVK தலைவர் விஜய் எங்கே போனார்? குமுறும் பிரபலம்!

Tap to resize

Vijay Son jason sanjay

இதனிடையே ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள படத்தில் சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டதோடு, அப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஜேசன் சஞ்சய்க்கு லைகா நிறுவனம் வழங்க உள்ள சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

Jason Sanjay Salary

அதன்படி நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு பெரும் தொகையை சம்பளமாக வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு கோடி, இரண்டு கோடி அல்ல முதல் படத்துக்கே விஜய் மகனுக்கு ரூ.10 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம். வழக்கமாக புதுமுக இயக்குனர் என்றால் அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்படுவது அபூர்வம், ஆனால் ஜேசன் சஞ்சய்க்கு முதல் படத்திலேயே 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ள தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. விஜய் மகன் என்பதால் அவருக்கு இந்த அளவு சம்பளம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விஜய்யின் கோட் படத்தை கழற்றிவிட்ட சென்னை சர்வதேச திரைப்பட விழா – பிளானோடு வந்த அமரன்!

Latest Videos

click me!