TRP-யில் விஜய் டிவி படு மோசம்! புதிய தொடர்களை வைத்து ரேட்டிங்கை அடிச்சு பறக்கவிடும் சன் டிவி!

First Published | Nov 4, 2024, 3:46 PM IST

இந்த வருடத்தின் 43-ஆவது வாரத்தில், சீரியல் TRP ரேட்டிங் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வாரம் சன் டிவி தொடர்கள், TRP யில் கெத்து காட்டி உள்ள நிலையில், முழுமையான தகவல்களை பார்ப்போம்.
 

Kayal Serial

திரைப்படங்களின் வெற்றி எப்படி பாக்ஸ் ஆபிஸ் மூலம் நிர்ணயிக்கப்படுகிறதோ... அதேபோல் சீரியல்களின் வெற்றி டிஆர்பி ரேட்டிங் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு சீரியலும் டிஆர்பி யில் டாப் 10 இடத்தை கைப்பற்ற வேண்டும் என போராடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் டாப் 10 டிஆர்பி லிஸ்டில் இடம் பிடித்த 10 சீரியல்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த வாரம் கயல் தொடர் முதல் இடத்தை பிடித்துள்ளது. எப்போது கயல் - எழில் திருமணம் நடக்கும் என்கிற மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், கடந்த வாரம் கயலுக்கும் - எழிலுக்கும் திருமணம் ஆகி அவர்கள் தல தீபாவளியையும் கொண்டாடி உள்ளார். இது குறித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த தொடர் 10.56 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Moonru Mudichu and Singapennea

இரண்டாவது இடத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியில் துவங்கப்பட்ட 'மூன்று முடிச்சு' தொடர் கைப்பற்றி உள்ளது. தன்னுடைய அம்மாவால் காதல் வாழ்க்கை அழிந்து போக... ஹீரோ சூர்யா குடிகாரனாக மாறுகிறார். தன்னுடைய அம்மாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, மினிஸ்டர் பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தின் போது, தன் வீட்டு தோட்டத்தில் வேலை செய்து வந்த, நந்தினியை திருமணம் செய்து கொள்கிறார். நந்தினியை வீட்டை விட்டு அனுப்ப நினைக்கும் மாமியார் மத்தியில் நந்தினி தன் வாழ்க்கையை தக்கவைத்து கொள்வாரா? என்கிற கேள்வியுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதை தொடர்ந்து, டி ஆர் பி  ரேட்டிங்கில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது 'சிங்க பெண்ணே' சீரியல். கடந்த சில மாதங்களாக, டிஆர்பிஎல் பின் தங்கியுள்ள இந்த தொடர், இந்த வாரம் 8 .90 TRP புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. ஆனந்தி ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது அன்பு வீட்டில் அவரின் அம்மாவுக்கு தெரியாமல் இருந்து வருகிறார். இந்த விஷயம் வெளியே வந்த எப்படிப்பட்ட பூகம்பம் வெடிக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, ஆனந்தி தன்னை அறியாமலேயே... அன்புவை நெருங்கி வருவதால், அன்புவை காதலிக்க துவங்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

3 பழைய சீரியல்களை பேக்கப் பண்ணிவிட்டு... அடுத்தடுத்து 4 புதிய சீரியல்களை களமிறக்கும் சன் டிவி!

Tap to resize

Sundari and Marumagal

அதே போல் இந்த வாரம் TRP ரேட்டிங்கில், 4 இடத்தில் உள்ளது 'மருமகள்' சீரியல். பிரபு மற்றும் ஆதிரையின் திருமணத்தை எப்படியும் நடத்த வேண்டும் என ஆதிரையின் தந்தை மற்றும் பிரபுவின் குடும்பத்தினர் நினைக்கும் நிலையில், இவர்களின் திருமணத்தை நிறுத்த ஆதிரையின் சித்தி மற்றும் பிரபுவின் சித்தப்பா  பல திட்டங்களை போட்டு அதில் அடுத்தடுத்து தோல்வியை தழுவி வருகின்றனர். பல தடைகளை தாண்டி இவர்கள் இருவரின் திருமணம் நல்லபடியாக நடைபெறுமா?  என்கிற பரபரப்பான தருணங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் 8.76 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றி உள்ளது.

இந்த வாரம் டிஆர்பிஎல் ஐந்தாவது இடத்தை கைப்பற்றியுள்ளது சுந்தரி தொடர். கூடிய விரைவில் முடிவுக்கு வரவுள்ள இந்த தொடர், இந்த வாரம் 8.28 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. சுந்தரியின் நல்ல மனதை புரிந்து கொண்டு அவரிடம் இருந்து விலகி செல்ல கார்த்திக் முடிவு செய்யும் நிலையில், சுந்தரி குடும்பத்தை காப்பாற்ற போய் இவருக்கு  தலையில் அடிபட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கார்த்தியின் இந்த முடிவால் சுந்தரி மற்றும் விஜயின் திருமணம் கூடிய விரைவில் நடைபெற உள்ளதாகவு, இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் 8.28 டிஆர்பி புள்ளிகளை சுந்தரி தொடர் கைப்பற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ramayanam and Siragadikka aasai

இதை தொடர்ந்து, சன் டிவியில் டப்பிங் தொடராக ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் தொடர் 7.99 டிஆர்பி புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

எப்போதும் டாப் 5 இடங்களை கைப்பற்றி வந்த விஜய் டிவி தொடரான சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் அதிரடியாக ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த வாரம் விஜயாவின் பணத்தை திருடியது சத்யா தான் என்பது அவருக்கு தெரியவந்துள்ள நிலையில், மீனா - முத்து வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிகிறது. இந்த வாரம் சிறகடிக்க ஆசை தொடர் TRP  6.63 புள்ளிகளை கைப்பற்றி உள்ளது.

ஆத்தாடி? ஒரே நாளில் கோடீஸ்வரரான ஷாரிக்; இரண்டாவது கணவராக மாற இத்தனை கோடி வரதச்சணையா!

Pandian Store Serial

எட்டாவது இடத்தில் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் உள்ளது. பாக்கியலட்சுமி சீரியலை பீட் பண்ணும் விதமாக கடந்த இரண்டு மாதமாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வாரம் 5. 58 டிஆர்பி புள்ளிகளை இந்த சீரியல் பெற்றுள்ளது. தங்க மயில் குடும்பத்தின் பித்தலாட்டம் வெளிவருமா? இதனால் இவரது வாழ்க்கையில் நடக்க உள்ளது என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Karthigai deepam serial

9-வது இடத்தில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடர் இடம்பிடித்துள்ளது. கார்த்திக் - தீபா வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை வாழ தயாராகிவிட்ட போதிலும், அடுத்தடுத்த பிரச்சனைகள் இந்த சீரியல் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது. இந்த தொடர் 5.32 TRP புள்ளிகளை இந்த வாரம் பெற்றுள்ளது.

குட் நியூஸ் சொன்ன கையேடு.. 'பாண்டியன் ஸ்டோர் 2' சீரியலை விட்டு விலகும் நடிகை?
 

Baakiya Lakshmi Serial

அதே போல் இந்த வாரம் அடித்து பிடித்து... கடைசி இடத்தை பிடித்துள்ளது 'பாக்கிய லட்சுமி' தொடர்... இனியாவின் டான்ஸ் திறமையை வெளிப்படுத்தும் எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதே சமயம் சீரியல் மீதான சுவாரசியம் குறைந்துள்ளதால், இந்த தொடர் கூடிய விரைவில் முடிவுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Latest Videos

click me!