
டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து, டாப் 5 இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ள சன் டிவி தொலைக்காட்சி, அடுத்தடுத்து சில பழைய சீரியல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, புதிய சீரியல்களை ஒளிபரப்ப தயாராக உள்ளது. அந்த வகையில் அடுத்தடுத்த ஒளிபரப்பாக உள்ள 4 சீரியல்கள் பற்றியும், முடிவுக்கு வர உள்ள 3 சீரியல்கள் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக திரைப்படங்களுக்கு நிகரான வரவேற்பு சீரியல்களுக்கும் கிடைத்து வருகிறது. அதுவும் சமீப காலமாக இளம் ரசிகர்கள் பலர் சீரியல்களை விரும்பி பார்க்க துவங்கியுள்ளனர். இதற்கு காரணம் அரைத்த மாவையே அரைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன்... காதல், எமோஷன், காமெடி, செண்டிமெண்ட் என ஒவ்வொரு சீரியல்களும், திரைப்படங்களையே மிஞ்சும் விதத்தில் உள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் இரண்டு - மூன்று வருடங்கள் ஒளிபரப்பான பின்னரே முடிவுக்கு வரும். இந்நிலையில் சன் டிவியில் கடந்த இரண்டு வருடத்திற்கு மேல் ஒளிபரப்பாகி வந்த 'இனியா' தொடர் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ளது. இனியாவுக்கு குழந்தை பிறந்த இனிமையான தருணத்துடன், இந்த தொடர் முடிவடைந்துள்ளது. இது குறித்த சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதைத்தொடர்ந்து 'சுந்தரி' சீரியலில், சுந்தரியை பழிவாங்க காத்திருந்த கார்த்தி மனம் மாறி உள்ள நிலையில், சுந்தரி சீரியலும் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. எனவே இந்த வாரத்துடன் சுந்தரி சீரியலும் முடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் டிஆர்பிஎல் முதலிடத்தை கைப்பற்றியுள்ள கயல் சீரியலும், கிட்டத்தட்ட நிறைவு பகுதியை நெருங்கி உள்ளதால் இன்னும் ஓரிரு வாரத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.
ஆத்தாடி? ஒரே நாளில் கோடீஸ்வரரான ஷாரிக்; இரண்டாவது கணவராக மாற இத்தனை கோடி வரதச்சணையா!
இப்படி இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த மூன்று சீரியல்கள் முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த சீரியல்களை ரீபிளேஸ் செய்யும் விதமாக, 4 புதிய சீரியல்கள் சன் டிவியில் துவங்க உள்ளன. அதன்படி 'ரஞ்சனி' என்ற சீரியல் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு தோழிக்கும் நான்கு நண்பர்களுக்கும் இடையே உள்ள நட்பை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது . நட்பு என்பது காதலுக்கும், கணவருக்கும், குடும்பத்திற்கும், எதிரானது இல்லை. ஒரு சிறந்த தோழியாக இருந்து கொண்டு நல்ல மருமகளாகவும், மனைவியாகவும், இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு பெண்ணின் கதை. இந்த சீரியலில் ஜி வி டிம்பில் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜீ தமிழ் சீரியல் நடிகர் சந்தோஷ் ஹீரோவாக நடிக உள்ளார். இந்த சீரியல் இனியா தொடர் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் ஒளிபரப்பாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான 'அன்பே வா' சீரியலில் நடித்து பிரபலமான நடிகை டெல்னா டேவிஸ் நடிக்க உள்ள 'ஆடுகளம்' என்கிற தொடர் விரைவில் துவங்கப்பட உள்ளது. இது குறித்த ப்ரோமோ சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பான நிலையில், சீரியல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த தொடரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியல் நடித்த Salmanul Faris கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த சீரியல் சுந்தரி சீரியலுக்கு பதிலாக பிரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளது.
நாமினேஷனில் சிக்கிய 11 பேர்; பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா?
மேலும் ராகவி என்கிற தொடர் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் 'சுந்தரி' சீரியலில் ஹீரோவாக இருக்கும் ஜிஷ்ணு மேனன் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக கண்மணி மனோகரன் மற்றும் தேஜஸ்வினி ஹீரோயின் ஆக நடிக்க உள்ளனர்.
அதே போல், 'உன்னை சரணடைந்தேன்' என்கிற சீரியலும் விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்த தொடரில் அயலி வெப் தொடரில் நடித்த, நடிகை அபி நட்சத்திரா ஹீரோயினாக நடிக்க, கனா காணும் காலங்கள் மூலம் பிரபலமான பரத் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த தொடர்களின் ஒளிபரப்பு நேரம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
திருமணத்துக்கு முன்பே ஆண் குழந்தை பெற்றெடுத்த ஐஸ்வர்யா ராய்? புயலை கிளப்பிய மகன்!