நெல்சனின் கஜானாவை காலி செய்தாரா கவின்? ப்ளடி பெக்கர் வசூல் நிலவரம் இதோ

Published : Nov 04, 2024, 12:38 PM IST

நெல்சன் தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடித்து தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி உள்ள ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
14
நெல்சனின் கஜானாவை காலி செய்தாரா கவின்? ப்ளடி பெக்கர் வசூல் நிலவரம் இதோ
Nelson Produced Bloody Beggar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகரான கவின், அடுத்தடுத்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வந்த படம் ப்ளடி பெக்கர். இப்படத்தை சிவபாலன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் இயக்குனர் நெல்சன் தயாரிப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் கவின் உடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

24
Bloody Beggar Movie

ப்ளடி பெக்கர் திரைப்படம் சிவகார்த்திகேயனின் அமரன் மற்றும் ஜெயம் ரவி நடித்த பிரதர் படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. இதில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது மட்டுமின்றி நல்ல வரவேற்பை பெற்று வருவதால் அப்படம் அதிகளவிலான தியேட்டர்களை ஆக்கிரமித்து உள்ளது. கம்மியான தியேட்டரில் ரிலீஸ் ஆன கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரியளவில் சோபிக்கவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் பாகுபலியாக மாற்றிய அமரன்! 4 நாட்களில் இம்புட்டு வசூலா?

34
Bloody Beggar Box Office

ப்ளடி பெக்கர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவிக்கவில்லை என்றாலும் முதலுக்கு மோசமில்லாத அளவுக்கு வசூலித்து உள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் நான்கு நாட்களில் 6 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதன்படி முதல் நாளில் 2.15 கோடியும், இரண்டாம் நாளில் 1.90 கோடியும், மூன்றாம் நாளில் 1.45 கோடியும் வசூலித்திருந்த இப்படம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று வெறும் 90 லட்சம் மட்டுமே வசூலித்து இருக்கிறது. வார நாட்களில் இப்படத்தின் வசூல் மேலும் அடிவாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

44
Bloody Beggar Movie Collection

ப்ளடி பெக்கர் படத்தை வெறும் 10 கோடி பட்ஜெட்டில் தான் தயாரித்து இருக்கிறார் நெல்சன். இப்படத்தில் நடிக்க கவினும் சம்பளமே வாங்கவில்லையாம். தற்போது உலகளவில் 4 நாட்களில் ப்ளடி பெக்கர் திரைப்படம் ரூ.12 கோடி வசூலித்துள்ளதால், நெல்சனின் கஜானா காலியாகாமல் தப்பித்து உள்ளது. இருப்பினும் அவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. படத்தின் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகாததே இப்படத்தின் சொதப்பலுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நவம்பர் முதல் வாரமே ஓடிடியில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிறதா? முழு லிஸ்ட் இதோ

click me!

Recommended Stories