பாலிவுட் திரையுலகில் பாட்ஷாவாக வலம் வருபவர் ஷாருக்கான். கடந்த நவம்பர் 2-ம் தேதி தனது 59வது பிறந்தநாளை கொண்டாடிய ஷாருக்கான். அப்போது, தன்னை வாழ்த்த தன் வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது, ரசிகர்களிடம் தான் எடுத்துள்ள ஒரு முக்கிய முடிவு பற்றியும் பேசி இருந்தார் ஷாருக். அதன்படி தான் இன்று முதல் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதாக அறிவித்தார். இனிமேல் நான் புகைபிடிக்க மாட்டேன் என்று ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்த ஷாருக்கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
24
Shah Rukh Khan
இந்த மாற்றம் குறித்துப் பேசிய அவர், புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதாகக் கூறிய அவர், புகைபிடிப்பதை நிறுத்தியதன் விளைவாக அது இருக்கலாம் என்றும் கூறினார். புகைபிடிப்பதை நிறுத்திய பின் மூச்சுத் திணறல் இருக்காது என்று நினைத்தேன், ஆனால் அந்த உணர்வு இன்னும் இருக்கிறது, மாற்றத்திற்கு பழகிக் கொண்டிருக்கிறேன் என்று கூறிய ஷாருக், கடவுள் அருளால் இதுவும் சரியாகிவிடும் என தெரிவித்தார்.
புகைபிடித்தல் மற்றும் காஃபின் பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஷாருக்கான் இந்த முடிவை எடுத்துள்ளார். அதாவது கடந்த 2011-ம் ஆண்டு அளித்த ஒரு பேட்டியில், ஷாருக்கான் தனது வாழ்க்கை முறை குறித்து வெளிப்படையாக பேசி இருந்தார். அதில் 'நான் ஒரு நாளைக்குக் குறைந்தது 100 சிகரெட்டுகள் பிடிப்பேன். சில நேரங்களில் சாப்பிடுவதைக் கூட மறந்துவிடும் அளவுக்கு புகைப்பிடிப்பேன். நான் தண்ணீர் குடிக்க மாட்டேன். என்னிடம் எப்போதும் சுமார் 30 கப் பிளாக் காஃபி இருக்கும். அது குடித்தும், எனக்கு சிக்ஸ் பேக்ஸ் இருக்கிறது' என்று பேசியிருந்தார்.
44
Bollywood Actor Shah Rukh Khan
ஷாருக்கான் தற்போது தனது அடுத்த ஆக்ஷன் த்ரில்லர் படமான 'கிங்' படத்திற்கு தயாராகி வருகிறார். இப்படத்தை சுஜோய் கோஷ் இயக்க உள்ளார். ஆரம்பத்தில் இப்படத்தில் ஷாருக் டான் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், லேட்டஸ்ட் தகவல்களின்படி, அவர் ஒரு கொலையாளியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் நடிக்கிறார். மேலும் அபிஷேக் பச்சன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.