cinema

ஷாருக்கான் ஒரு மணி நேரத்தில் சம்பாதிப்பது எவ்வளவு?

கோடிகளில் சொத்துக்கள் கொண்ட ஷாருக்கான்

59 வயதாகும் ஷாருக்கான் சுமார் 7300 கோடி ரூபாய் சொத்துக்களை வைத்திருக்கிறார். படங்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பு போன்றவற்றின் மூலம் இதை சம்பாதிக்கிறார்.

ஷாருக்கானின் முதல் சம்பளம் எவ்வளவு?

ஷாருக்கானின் முதல் சம்பளம் வெறும் 50 ரூபாய் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். பங்கஜ் உதாஸின் இசை நிகழ்ச்சியில் பணியாளராகப் பணிபுரிந்ததற்காக இதைப் பெற்றார். 

இன்று ஷாருக்கான் எவ்வளவு சம்பாதிக்கிறார்?

இன்று ஷாருக்கானுக்கு பல வருமான ஆதாரங்கள் உள்ளன. நடிகராக படங்களில் நடிக்க 150-250 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். விளம்பரங்களுக்கு 5-10 கோடி ரூபாய் வசூலிக்கிறார்.

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் பணம் பெறுகிறார்!

தகவல்களின்படி, தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்துவதற்கு 2-3 கோடி ரூபாய் வசூலிக்கிறார்.

ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிக்கிறார்?

பேச்செக் டாட் தகவலின்படி, ஷாருக்கான் ஆண்டுக்கு 800 கோடி, மாதத்திற்கு 66 கோடி+, வாரத்திற்கு 15 கோடி+, நாளொன்றுக்கு 3 கோடி+ சம்பாதிக்கிறார்.

சாதாரண ஊழியரின் மாதச் சம்பளத்தை விட அதிகம்!

ஒரு மணி நேரத்திற்கும் 21 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கிறார். ஷாருக்கானின் மணி நேர வருமானம் ஒரு சாதாரண ஊழியரின் மாதச் சம்பளத்தை விட அதிகம். 

எளியவர்கள் சம்பளத்தை விட அதிகம்:

தனியார் துறைகளில் வேலை செய்யும் பலர் ஒரு மாதம் முழுவதும் பணியாற்றிவிட்டு சம்பமாக 15-20 ஆயிரம் ரூபாய் தான் சம்பாதிக்கின்றனர்.
 

ரெட் சில்லீஸ் மற்றும் ஐபிஎல்

ஷாருக்கான் நடிப்பை தாண்டி தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் மற்றும் ஐபிஎல் அணி கே.கே.ஆர் மூலமும் நல்ல வருமானம் ஈட்டுகிறார்.
 

Image credits: Social Media

கார் கலெக்ஷன்:

ஷாருக்கான் 31 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள கார் சேகரிப்பை வைத்திருக்கிறார். புக்காட்டி வெய்ரான், பென்ட்லி கான்டினென்டல் ஜிடி, ரோல்ஸ் ராய்ஸ் குல்லினன் போன்ற கார்கள் உள்ளன.

Image credits: Social Media

காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஜான்வி கபூர்!

கேட்டாலே கிறுகிறுக்க வைக்கும் ஆராத்யா பச்சனின் சொத்து மதிப்பு!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய சாய் பல்லவியின் 7 சூப்பர் ஹிட் படங்கள் இதோ!

அகல் ஒளியில் பிரகாசிக்கும் அதிதி ஷங்கர்!