sivakarthikeyan
சின்னத்திரையில் தொகுப்பாளராக கலக்கி வந்த சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளிவந்த மெரினா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என அடுத்தடுத்து ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் நம்பிக்கை நாயகனாக உருவெடுத்தார் சிவகார்த்திகேயன். புதுமுக நடிகர்களுக்கு 50 கோடி வசூல் என்பதே 1000 கோடி வசூலுக்கு சமமாக இருக்கும்.
Sivakarthikeyan Hit Movies
அப்படி சிவகார்த்திகேயன் முதன்முதலில் 50 கோடி வசூல் அள்ளிய திரைப்படம் மான் கராத்தே. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். ஹீரோவாக அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் 50 கோடி வசூல் படத்தை கொடுத்தார் எஸ்.கே. இதையடுத்து அடுத்த இரண்டே ஆண்டுகளில் 75 கோடி வசூல் படத்தை கொடுத்து தனது மார்க்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார் சிவகார்த்திகேயன். ரெமோ படத்தின் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார் எஸ்.கே.
sivakarthikeyan Success Films
ஒவ்வொரு நடிகரின் கெரியரிலும் ஒரு சில சறுக்கலான காலகட்டம் இருக்கும். அப்படி சிவகார்த்திகேயனுக்கும் 2017-ம் ஆண்டு ரஜினி முருகன் படத்தின் வெற்றிக்கு பின்னர் சீமராஜா, வேலைக்காரன், ஹீரோ, மிஸ்டர் லோக்கல் என அடுத்தடுத்து தோல்வி படங்களாக அமைந்ததால் அவரின் மார்க்கெட்டும் கடும் சரிவை சந்தித்தது. இப்படி தொடர் தோல்விக்கு பின்னர் எஸ்.கே கொடுத்த தரமான கம்பேக் படம் தான் டாக்டர். நெல்சன் இயக்கிய இப்படம் சிவகார்த்திகேயனை 100 கோடி வசூல் நாயகனாக உயர்த்தியது.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனை பாக்ஸ் ஆபிஸ் பாகுபலியாக மாற்றிய அமரன்! 4 நாட்களில் இம்புட்டு வசூலா?
sivakarthikeyan Box Office hit Movies
டாக்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் நடித்த டான் படம் ரிலீஸ் ஆகி 125 கோடி வசூலை வாரிக்குவித்தது. இதனால் கோலிவுட்டின் வசூல் சக்கரவர்த்தியாக உருவெடுத்த சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் பேரிடியாக அமைந்தது. அப்படம் கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியால் சிவகார்த்திகேயன் அவ்வளவு தான் என்று விமர்சித்தவர்கள் ஏராளம். ஆனால் அதையெல்லாம் மாவீரன் படத்தின் வெற்றி மூலம் தவிடுபொடி ஆக்கினார் எஸ்.கே.
Vijay, sivakarthikeyan
இருப்பினும் மாவீரன் படம் 80 கோடி மட்டுமே வசூலித்திருந்ததால் சிவகார்த்திகேயனுக்கு அவ்வளவு தான் மவுசா என்கிற கேள்வியும் எழுந்தது. அந்த கேள்விகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக தான் தற்போது அமரன் படம் அமைந்துள்ளது. அப்படம் பாக்ஸ் ஆபிஸில் மூன்றே நாட்களில் 100 கோடி வசூலை அள்ளியது. இதன்மூலம் விஜய், ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக 3 நாளில் 100 கோடி வசூல் அள்ளிய ஹீரோ என்கிற பெருமையை பெற்றுள்ளார் எஸ்.கே.
Box Office King sivakarthikeyan
அஜித், தனுஷுக்கே 3 நாட்களில் 100 கோடி வசூல் என்பது எட்டாக்கனியாக உள்ள நிலையில், வெறும் மூன்று 100 கோடி படங்களை கொடுத்த எஸ்.கே. அதை அசால்டாக எட்டிப்பிடித்து பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக உருவெடுத்துள்ளார். விஜய்க்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸிலும் அசுர வளர்ச்சி கண்ட ஹீரோ என்றால் அது சிவகார்த்திகேயன். ஏற்கனவே அடுத்த தளபதி என கொண்டாடப்படும் சிவகார்த்திகேயன், விஜய்யின் இடத்தை நிச்சயம் நிரப்பி விடுவார் என்பது அமரன் படத்தின் மூலம் ஆணித்தனமாக தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... அமரன் முதல் லக்கி பாஸ்கர் வரை; தீபாவளி ரிலீஸ் படங்களை எந்தெந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம்?