நடிச்ச 3 தமிழ் படமும் 100 கோடி வசூல்; யார் இந்த கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் குயின்?

First Published | Nov 4, 2024, 2:48 PM IST

கோலிவுட்டில் 100 கோடி வசூல் என்பது பலரது கனவாக இருக்கும் நிலையில், ஒரு நடிகை நடிச்சு தியேட்டரில் ரிலீஸ் ஆன 3 படமும் 100 கோடி வசூல் அள்ளி உள்ளது.

Actress Childhood Photos

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து டாப் ஹீரோயினாக உயர்ந்த நடிகைகள் ஏராளம். உதாரணத்திற்கு ராதா, நதியா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகளை சொல்லலாம். அந்த வரிசையில் லேட்டஸ்டாக கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து அடுத்தடுத்து மூன்று 100 கோடி வசூல் படங்களில் நடித்து மாஸ் காட்டி இருக்கிறார் ஒரு அக்கட தேசத்து அழகி. அந்த நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.

Malavika mohanan Childhood Photo

அவர் வேறு யாருமில்லை நடிகை மாளவிகா மோகனன் தான். இவர் கடந்த 2018-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா, அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

Tap to resize

Malavika mohanan Rare Childhood Photo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் தான் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருந்தார். அவர் தமிழில் ஹீரோயினாக நடித்த முதல் படம் இதுவாகும். இப்படத்தில் சாரு என்கிற கல்லூரி டீச்சராக நடித்திருந்தார் மாளவிகா. இந்த இரண்டு படங்களுமே மாளவிகாவுக்கு மறக்க முடியாத படமாக அமைந்தன.

இதையும் படியுங்கள்... பனாரஸ் பட்டு புடவை... தலை நிறைய மல்லிகை பூவோடு தங்க சிலை போல் நடிகை மாளவிகா மோகனன்! லேட்டஸ்ட் போட்டோஸ்!

Actress Malavika mohanan

ஏனெனில் மாளவிகா மோகனன் ரஜினியுடன் நடித்த பேட்ட மற்றும் விஜய்யுடன் நடித்த மாஸ்டர் ஆகிய இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டின. இதற்கு அடுத்த படியாக தனுஷுக்கு ஜோடியாக மாறன் என்கிற படத்தில் நடித்தார் மாளவிகா. ஆனால் இப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

Malavika mohanan Photos

அதன்பின்னர் பா.இரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் நடிக்க கமிட்டானார் மாளவிகா. அப்படத்திற்காக உடல் எடையை குறைத்தது மட்டுமின்றி சிலம்பமும் கற்றுக்கொண்டார். படத்தில் ஆராத்தி எனும் சூனியக்காரி கேரக்டரில் மாளவிகாவின் நடிப்பை பார்த்து அனைவரும் பிரம்மித்துப் போயினர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலை வாரிக்குவித்தது.

Malavika mohanan Movie Line Up

தமிழில் மட்டுமல்லாது இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் இவர், தற்போது கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார். தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சர்தார் 2 படத்தில் நடித்து வரும் மாளவிகா, தெலுங்கில் பிரபாஸ் உடன் ராஜாசாப், இந்தியில் ஒரு படம் என செம்ம பிசியான நாயகியாக வலம் வருகிறார்.

இதையும் படியுங்கள்... செக்கச் சிவந்த சேலையில்... ஸ்ட்ராபெரி பெண்ணாக மிளிரும் தங்கலான் நாயகி மாளவிகா மோகனன்

Latest Videos

click me!