தளபதி விஜய்யின் அரசியல் வருகை குறித்த பேச்சு பல வருடங்களாக அடிபட்டு வந்தாலும், கடந்த இரண்டு வருடங்களில், விஜய் அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருவது போல் பல விஷயங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார். அந்த வகையில் அம்பேத்கார் பிறந்தநாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கூறியது முதல், பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மதியம் ஒரு வேளை உணவை இலவசமாக வழங்கியது வரை, ஒவ்வொரு செயலாலும் மக்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.