தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், அனைத்து தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கி கௌரவிக்கும் விதமாக பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக துவங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மாணவர்களுக்கு ஊக்க தொகை கொடுத்து, கௌரவிப்பதற்காக மிகவும் எளிமையாக வெள்ளை நிற ஷர்ட் மற்றும் கருப்பு நிற ஃபார்மல் பேன்ட்டில் எளிமையாக வருகை தந்தார் விஜய்.
சில நிமிடங்கள், முதல் வரிசையில் அமர்ந்திருந்த விஜய், பின்னர்... மாணவ, மாணவிகளுக்கு நடுவே அமர்ந்து கலகலப்பாக பேசினார்.
விஜய் வந்த உடனே, தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கிய நிலையில், புஸ்ஸி ஆனந்த் வரவேற்புரை வழங்கிய பின்னர், தளபதி விஜய் மேடைக்கு சென்று சில நிமிடங்கள் பேசிவிட்டு பின்னர்... மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.