Actor Mushtaq Khan Kidnapped : பாலிவுட்டில் ஸ்ட்ரீ 2, வெல்கம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரப்லாமான நடிகர் முஷ்டாக் கான் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ட்ரீ 2 உட்பட பல பாலிவுட் படங்களில் நடித்த நடிகர் முஷ்டாக் கான் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட பின்னர், அவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டுள்ளது. பிஜ்னூரில் பணம் பறிப்பு கும்பலிடம் இருந்து தப்பித்து வந்த அவர் இந்த கடத்தல் சம்பவம் குறித்து பிஜ்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முஷ்டாக்கை ஏமாற்றி அழைத்துச் சென்று அவரை கடத்தி இருக்கும் சம்பவம் பாலிவுட்டில் பீதியை கிளப்பி உள்ளது.
24
Stree 2 Actor Mushtaq Khan
நடிகர் முஷ்டாக் கான் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி கடத்தப்பட்டிருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரை அழைத்துள்ளனர். இதற்காக மும்பையிலிருந்து டெல்லி வந்த முஷ்டாக் கானை, விமான நிலையத்திலிருந்து ஒரு காரில் மீரட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மீரட்டுக்கு பதில் டெல்லியின் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றபோது தான் கடத்தப்பட்டதை உணர்ந்திருக்கிறார் முஷ்டாக் கான். அந்த கடத்தல் கும்பல், அவரை ஒரு வீட்டில் சுமார் 12 மணி நேரம் கட்டி வைத்திருக்கின்றனர்.
அவரிடமிருந்து பணம் பறிக்க முயன்ற அந்த கும்பல் அவரை சித்திரவதை செய்திருக்கிறது. கடத்தல்காரர்கள் அவரிடம் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி இருக்கின்றனர். பின்னர் அவரிடமிருந்த 2 லட்சத்தை பறித்துள்ளனர். முஷ்டாக் கானை கட்டி வைத்திருந்த இடத்தில், அவருக்கு தொழுகை நடத்தும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் அருகில் ஒரு மசூதி இருப்பதை உணர்ந்த முஷ்டாக் கான், அங்கிருந்து தப்பிமசூதிக்குச் சென்று மக்களிடம் உதவி கேட்டிருக்கிறார்.
44
Mushtaq Khan Escaped
அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். பின்னர் பிஜ்னூர் காவல் நிலையத்தில் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக முஷ்டாக் கான் புகார் அளித்திருக்கிறார். அவரின் புகாரை ஏற்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல் கும்பலிடம் இருந்து மீண்டு வந்தது குறித்து முஷ்டாக் கான் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இவர் ஸ்ட்ரீ 2, வெல்கம், ஹம் ஹை ராஹி பியார் கே, ஆக்ரி குலாம் உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.