அடுத்த அனிருத் இவர்தான்; அதற்குள் இத்தனை படங்களுக்கு இசையமைக்கிறாரா சாய் அபயங்கர்?

Published : Dec 11, 2024, 08:41 AM IST

Music Director Sai Abhyankkar Movie Line Up : பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கும் சாய் அபயங்கர், கைவசம் உள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
15
அடுத்த அனிருத் இவர்தான்; அதற்குள் இத்தனை படங்களுக்கு இசையமைக்கிறாரா சாய் அபயங்கர்?
Sai Abhyankkar

அடுத்த அனிருத், சாய் அபயங்கர்

அனிருத்தை போல் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார் சாய் அபயங்கர். இவருக்கு தற்போது 19 வயது ஆகிறது. இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது இவரின் இரண்டு பாடல்கள் தான். கட்சி சேர மற்றும் ஆசை கூட என இரண்டு ஆல்பம் பாடல்களை ரிலீஸ் செய்து சோசியல் மீடியா சென்சேஷன் ஆகிவிட்டார் சாய் அபயங்கர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இந்த பாடல்கள் தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

25
Tippu and Harini son sai abhyankkar

யார் இந்த சாய் அபயங்கர்

சாய் அபயங்கர் வேறுயாருமில்லை, தமிழ் திரையுலகில் முன்னணி பாடகர்களாக கலக்கி வந்த பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி ஜோடியின் மகன் தான் இவர். பெற்றோரை போல் இசையின் மீது ஆர்வம் கொண்டிருந்த சாய் அபயங்கர், முறையாக சங்கீதம் பயின்று தற்போது இசையமைப்பாளராக உருவெடுத்து இருக்கிறார். இவர் தான் தற்போது கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக உள்ளார். அவர் கைவசம் உள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.

35
Benz movie

பென்ஸ்

சாய் அபயங்கரை இசையமைப்பாளர் ஆக்கியது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். அவர் இசையமைத்த ஆல்பம் பாடல்களால் இம்பிரஸ் ஆன லோகேஷ் கனகராஜ், அவர் தான் தயாரிக்கும் பென்ஸ் படத்தின் மூலம் சாயை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறார். பென்ஸ் திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... அடுத்த ரோலெக்ஸ் இவரா? பென்ஸ் படம் மூலம் எல்சியு-வில் வில்லனாக இணையும் பிரபலம்

45
Suriya 45

சூர்யா 45

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்து வரும் சூர்யா 45 திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளார். முதலில் இப்படத்திற்கு இசையமைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கமிட்டாகி இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் திடீரென விலகியதை அடுத்து சாய் அபயங்கருக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது. இது அவர் இசையமைக்க உள்ள 2வது படமாகும்.

55
Sai Abhyankkar Movie Line Up

பிரதீப் ரங்கநாதன் படம்

லவ் டுடே படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் தற்போது பிசியான ஹீரோவாக வலம் வருகிறார். ஏற்கனவே விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி, அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் போன்ற படங்களில் நடித்து வரும் பிரதீப், அடுத்ததாக சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... விலகிய AR ரகுமான்; ‘சூர்யா 45’ இசையமைப்பாளராக கமிட்டான டிரெண்டிங் பாய்

Read more Photos on
click me!

Recommended Stories