'கடவுளே அஜித்தே!' என கோஷம் போடுவது அநாகரிகம்: நடிகர் அஜித் காட்டம்

First Published | Dec 10, 2024, 9:48 PM IST

பொது இடங்களில் "கடவுளே.. அஜித்தே!" போன்ற கோஷங்களை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று நடிகர் அஜித் கேட்டுக்கொண்டுள்ளார். எந்த விதமான முன்னொட்டுடனும் தன்னை அழைப்பதை விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

Thala ajith kumar

தனது ரசிகர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு "கடவுளே... அஜித்தே!" என்று கோஷம்போடுவதைக் கண்டித்து நடிகர் அஜித் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது பெயருக்கு முன் எந்த முன்னொன்டும் சேர்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

Ajith Kumar starrer Vidaamuyarchi film updates out

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில்,அநாகரிமாக. தேவையில்லாமல் எழுப்பப்படும் 'க..அஜித்தே "என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் நுளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட்ட வேண்டும் என விரும்புகிறேன்.

Tap to resize

Ajith Kumar movie Vidaamuyarchi Teaser

எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

Ajith Kumar starrer new film crisis report

யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்! வாழு & வாழ விடு!"

இவ்வாறு நடிகர் அஜித் குமார் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.

Latest Videos

click me!