அடுத்த ரோலெக்ஸ் இவரா? பென்ஸ் படம் மூலம் எல்சியு-வில் வில்லனாக இணையும் பிரபலம்

Published : Dec 11, 2024, 07:44 AM IST

Benz Movie Villain : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் பென்ஸ் திரைப்படத்தின் வில்லன் குறித்த அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
14
அடுத்த ரோலெக்ஸ் இவரா? பென்ஸ் படம் மூலம் எல்சியு-வில் வில்லனாக இணையும் பிரபலம்
Lokesh Kanagaraj

லோகேஷின் எல்சியு

ஹாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் சினிமேட்டிக் யூனிவர்ஸ் கான்செப்டை தமிழ் சினிமாவில் கொண்டு வந்து அதில் வெற்றியும் கண்டவர் லோகேஷ் கனகராஜ். அவர் கைதி படம் மூலம் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸை தொடங்கினார். இதையடுத்து, விக்ரம், லியோ என தன் அடுத்தடுத்த படங்களையும் அந்த யூனிவர்ஸுக்குள் கொண்டுவந்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கும் லோகேஷ், எல்சியு-வை மேலும் விரிவுபடுத்தும் முயற்சியில் தற்போது இறங்கி இருக்கிறார்.

24
Lokesh Kanagaraj Produced Benz Movie

பென்ஸ் திரைப்படம்

அதன்படி லோகேஷின் சினிமேட்டிக் யூனிவர்ஸில் அடுத்த படமாக பென்ஸ் இணைந்துள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். இப்படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையது தான். மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். பென்ஸ் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அப்டேட்டும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... கோலிவுட் ‘ஹிட்’மேன் லோகேஷ் கனகராஜ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

34
Benz Movie Update

பென்ஸ் பட அப்டேட்

அண்மையில் இப்படத்தின் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் கமிட்டாகி உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆச கூட, கட்சி சேர போன்ற சுயாதீன இசை பாடல்கள் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன சாய் அபயங்கர், பென்ஸ் படம் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். அடுத்த அனிருத் ரேஞ்சுக்கு கொண்டாடப்பட்டு வரும் இவர், எல்சியூ படங்களான விக்ரம், லியோவுக்கு இசையால் ஏற்படுத்திய தாக்கத்தை சாய் அபயங்கரும் ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
Benz Movie Villain Madhavan

பென்ஸ் பட வில்லன் யார்?

இந்நிலையில், தற்போது பென்ஸ் படத்தில் இருந்து மேலும் ஒரு மாஸ் அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி பென்ஸ் படத்தின் வில்லன் யார் என்கிற தகவல் இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதன்படி நடிகர் மாதவன் பென்ஸ் படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆன நிலையில், அதே போன்ற ஒரு மாஸ் வில்லனாக மாதவன் பென்ஸ் படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சூர்யாவின் இரும்புக்கை மாயாவி; லோகேஷ் எனக்கு கொடுத்த முக்கிய ரோல் - மாஸ் அப்டேட் கொடுத்த நடிகர்!

click me!

Recommended Stories