தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனர் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர், பாண்டிராஜ். இவர் இயக்குனர் சேரன், தங்கர் பச்சான் போன்ற இயக்குனர்களிடம், துணை இயக்குனராக பணியாற்றிய பின்னர் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
சேரனை பொறுத்தவரை மிகவும் அன்பான மனிதர், கோபம் வந்து விட்டால் யார் இருக்கிறார்... இல்லை என பார்க்க மாட்டார் திட்டி தீர்த்து விடுவார். அப்படி தான். ஒருமுறை பாண்டிய ராஜையும் வெளுத்து வாங்கியுள்ளார். இவரும் அவர் திட்டிய கோவத்தை யார் மேல் காட்டுவது என தெரியாமல், டிரைவர் ஒருவர் மேல் காட்டியுள்ளார்.
தன்மானத்தை இழந்து இனி இங்கு வேலை செய்ய வேண்டாம் என எண்ணிய பாண்டியராஜ், நடந்தே அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மேலும் வந்த கோபத்திலேயே தங்கர் பச்சானிடம் துணை இயக்குனர் வாய்ப்பு கேட்க அவரும் உடனே கொடுத்துள்ளார். அதன் பின் தான் அழகி படத்தையும் அவர் இயக்க அதில் பாண்டிராஜ் வேலை செய்தார்.