இயக்குனர் மணிரத்னம் இயக்கிய, 'கடல்' படத்தின் மூலம் ஹீரோவாக, தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த.. கெளதம் கார்த்திக் தொடர்ந்து, தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க போராடி வருகிறார். ஒரு கட்டத்தில் அடல்ட் பட நாயகன் என பெயர் எடுத்த இவர், தற்போது அது போன்ற கதைகள் வந்தால், நிராகரித்து விட்டு... தரமான கதையில் நடிக்க வேண்டும் என நிறுத்தி, நிதனமாக கதை தேர்வு செய்து நடித்து வருகிறார்.