விவாகரத்துக்கு பின்னரும் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் சமந்தா. திறமையான நடிப்பு மற்றும் துள்ளலான அழகால் ரசிகர்கள் மனதை வசீகரித்துள்ள சமந்தா, விவாகரத்துக்கு பின்னர், ஹாலிவுட் படங்களில் கூட கமிட் ஆகி கெத்து காட்டி வருகிறார்.
இந்த படம் ரிலீஸ் தேதி, அறிவித்தால்... புரோமோஷன் பணிகளில் சமந்தா கலந்து கொள்வது மிகவும் அவசியம் என படக்குழுவினர் கருதுகிறார்கள். காரணம் இது சமந்தாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம், தற்போது சமந்தா தோல் பிரச்சனைக்காக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதால், அவர் எப்போது குணமடைவார் என்பது தெரியாததால்... படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட படக்குழு தாமதமாக்கி வருவதாக கூறப்படுகிறது.
எனவே அமெரிக்காவில் தோல் சிகிச்சைக்காக சென்றுள்ள சமந்தா முழுமையாக குணமடைந்து வந்த பின்னரே இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதி மற்றும் புரோமோஷன் பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது.