குஷ்பு-வின் இளைய மகள் அனந்திதா மிகவும் துரு துரு பெண்ணாக இருந்தாலும், குஷ்பு - சுந்தர்.சி-யின் மூத்த மகள் அவந்திகா மிகவும் சைலன்ட் டைட். பெரிதாக டிவி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டவர் கிடையாது. ஆனால் இவர் தான் விரைவில் ஹீரோயினாக அறிமுகமானார் என குஷ்பு சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஆளே அடையாளம் தெரியாத மாறியுள்ளார்.
மேலும் ஹாலிவுட் ஹீரோயின்களை போல்... தோள்பட்டை, கை, தொடை என... பல்வேறு இடங்களில் விதவிதமாக டாட்டூ குத்தியுள்ளது மட்டும் இன்றி, வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.
எனவே ஏற்கனவே குஷ்பு அறிவித்ததை போன்று, விரைவில் திரைப்படத்தில் நடிக்க துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இவர் நடிக்கும் படத்தை, சுந்தர்-சி இயக்கி, குஷ்பு தயாரிப்பாரா? அல்லது வேறு இயக்குனர் இயக்கத்தில் நடிப்பாரா என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது.